அடுத்த நாளுக்கு வைக்கும் உணவுகளில் சுவை அதிகரிக்கிறதா? விஞ்ஞானிகள் ஆய்வு!

 

அடுத்த நாளுக்கு வைக்கும்  உணவுகளில் சுவை அதிகரிக்கிறதா? விஞ்ஞானிகள் ஆய்வு!

அடுத்த நாள் சாப்பிடுவதற்கான தயாரித்து வைக்கப்படும் உணவுகளில் சுவை அதிகரிப்பதாக இங்கிலாந்தில் ஒரு ஆய்வு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர்கள் சில முடிவுகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, மேலை நாட்டு உணவு வகைகளான
பிட்சா, சில்லி கார்ன், ஸ்ஃபெகட்டி, காசரோல் போன்றவை அடுத்த நாள் சூடாக்கி உண்பதற்கு ஏற்றவை என குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த நாளுக்கு வைக்கும்  உணவுகளில் சுவை அதிகரிக்கிறதா? விஞ்ஞானிகள் ஆய்வு!

பொதுவாகவே, ஒரு சில உணவுகள் சமைக்கப்பட்ட நாளினை விடவும், அடுத்த நாள் சுவையாக இருக்கும் என்பது உலகம் முழுவதும் அறிந்த நடைமுறை. இங்கிலாந்தில் 6 மாதங்களாக நடைபெற்ற அந்த ஆய்வில் 74 சதவீத மக்கள் இந்த நடைமுறையை பின்பற்றி வருவதாக கூறியுள்ளனர்.

இப்படி, மறுநாள் உண்பதற்கு சுவையாக இருக்கும் உணவுகள் பொதுவாகவே ஈரப்பதம் கொண்டுள்ளவையாக உள்ளன. பல உள்பொருட்களை கொண்டுள்ளதால் அவை நீர்த்துப் போவதில்லை என்றும் மக்கள் கூறியுள்ளனர்.

அதிகமான மசாலாக்கள் சேர்க்கப்படுவதால், அவை நன்றாக கலப்பதற்கு போதிய நேரம் தேவைப்படுகின்றது. குறிப்பாக மாமிசங்களில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் நன்கு ஊறுவதற்கு நேரம் தேவைப்படுகிறது என உணவு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அடுத்த நாளுக்கு வைக்கும்  உணவுகளில் சுவை அதிகரிக்கிறதா? விஞ்ஞானிகள் ஆய்வு!

ஆனால், முதல்நாள் தயார் செய்த உணவு என்றாலும், அடுத்த நாள் உண்பதற்கு முன் சூடாக்க வேண்டும் என்கிறனர். அதுபோல அடுத்த நாள் சமைப்பதற்கு என வைக்கும் உணவுப் பொருட்களை பிரீசரில் வைக்க வேண்டுமாம்.

சூடாக செய்த உணவுகளாக இருந்தால், உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைக்காமல், சூடு நன்கு ஆறியதும் தான் வைக்க வேண்டுமாம். இல்லையேல் வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்கின்றனர்.
எந்த உணவாக இருந்தாலும், உண்பதற்காக எடுக்கும்போது தவறாமல் சூடாக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த நாளுக்கு வைக்கும்  உணவுகளில் சுவை அதிகரிக்கிறதா? விஞ்ஞானிகள் ஆய்வு!

மீதம் வைத்த உணவு மறுநாள் சுவையாக இருக்கும் என்பது எல்லா உணவுக்கும் பொருத்தமானது அல்ல என்றும் உணவு ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பழைய சோறுக்கு பெயர் வைத்த வரிசையில், பழைய பிட்சா, பழைய ஸ்ஃபெகட்டியும் இடம்பெறுமோ?