இந்தோனேஷியாவில் அடிக்கடி மாயமாகும் விமானங்கள் – காரணம் என்ன?

 

இந்தோனேஷியாவில் அடிக்கடி மாயமாகும் விமானங்கள் – காரணம் என்ன?

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீவிஜய என்ற விமானம், வானில் பறந்த நான்கே நிமிடங்களில் மாயமாகியிருக்கிறது. விமானம் என்னானது? பயணிகளின் நிலை என்ன? போன்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

இந்தோனேஷியாவில் அடிக்கடி மாயமாகும் விமானங்கள் – காரணம் என்ன?

உலகிலேயே அதிகமான தீவுகளை (சுமார் 17,000) உள்ளடக்கிய நாடு இந்தோனேஷியா. சுற்றுலா துறை தான் அங்கு பிரதானம். அதேபோல சர்வதேச வர்த்தகமும் அதிகளவில் நடைபெறுகிறது. இதன் மூலம் குறைந்த வருடங்களிலையே விமானத் துறையில் அதீத வளர்ச்சி கண்ட நாடாக மாறியது.

சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக விமானங்களைக் கொள்முதல் செய்யும் அளவிற்கு தனது விமானப் போக்குவரத்து சந்தையை விரிவுபடுத்தியுள்ளது. 2034ஆம் ஆண்டில் உலகின் ஆறாவது பெரிய விமானச் சந்தையாக இந்தோனேஷியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில் அடிக்கடி மாயமாகும் விமானங்கள் – காரணம் என்ன?

இதுபோன்ற நல்ல முகங்களைக் கொண்ட இந்தோனேஷியாவின் கோர முகம் தான் அடிக்கடி நிகழும் விமான விபத்துகள். இந்தோனேஷியாவும் விமான விபத்துகளும் நகமும் சதையும் போல பிரிக்க முடியாத நிகழ்வுகள். அடிக்கடி விமானங்கள் மாயமாவதும், பின் அவற்றின் பாகங்கள் கடலிலும் மலைகளிலும் கண்டெடுக்கப்படுவது சோகமான தொடர்கதையாக உள்ளது.

2013-2018க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தோனேஷியாவில் மிகக் கடுமையான 94 விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணத்தைத் தேடிச் சென்றால், அந்நாட்டில் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதே பிரதான காரணமாகக் கூறுகிறார்கள் விமான துறை நிபுணர்கள்.

இந்தோனேஷியாவில் அடிக்கடி மாயமாகும் விமானங்கள் – காரணம் என்ன?

எந்த ஒரு போக்குவரத்தாயினும் அதில் பாதுகாப்பையே மக்கள் விரும்புவார்கள். அதிலும் விமானப் பயணம் என்பது உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம். அப்படி இருக்கையில் அரசு விமானப் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல், விமானங்களை வாங்கி குவிப்பதிலேயே குறியாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், பைலட்களுக்கு முறையான பயிற்சி கொடுக்காததும், வெளிநாட்டு பைலட்களை இங்கு பணியமர்த்துவதற்கான சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதும் கூடுதல் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இந்தோனேஷியாவில் அடிக்கடி மாயமாகும் விமானங்கள் – காரணம் என்ன?

இந்த தசாப்தத்தில் இந்தோனேஷியாவில் விமான விபத்து ஏற்படாத ஆண்டுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். 2014ஆம் ஆண்டில் இரு விபத்துகளில் 332 பயணிகள் உயிரிழந்தனர். அதேபோல 2015இல் 54 பேர், 2016இல் 13 பேர், 2018இல் 178 பேர் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

தொடர்ச்சியாக விமான விபத்துகளைச் சந்தித்துக் கொண்டிருந்ததாலும், இந்தோனேஷியாவின் மோசமான பராமரிப்பு நடைமுறைகளாலும் 2007ஆம் ஆண்டு அந்நாட்டு விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தது. அதன்பின் அரசால் பராமரிக்கப்படும் கருடா விமானங்களை மட்டும் அனுமதித்தது.

இந்தோனேஷியா தன் தவறை உண்ர்ந்து படிப்படியாக விமானப் போக்குவரத்தை மேம்படுத்தியது. அதற்குப் பிறகு தான் 2018ஆம் ஆண்டு முழுமையாக தடையை அகற்றி அனைத்து விமானங்களும் இயங்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்தது. இருப்பினும், கடந்த 15 வருடங்களில் 40 ஆபத்தான விமான விபத்துகள் அந்நாட்டில் பதிவாகியுள்ளன.

இந்தோனேஷியாவில் அடிக்கடி மாயமாகும் விமானங்கள் – காரணம் என்ன?

ஐரோப்பியா தடை நீக்கியதற்குப் பின் நிகழ்ந்த விமான விபத்து (அக்டோபர், 2018) போயிங் 737 மேக்ஸ் ரக விமான செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக நிகழ்ந்தது என்பதால் அது இந்தோனேஷிய விமான துறையின் மீது கேள்விகளை எழுப்பப்படவில்லை.

ஏனென்றால், 737 மேக்ஸ் ரக விமானத்தின் தயாரிப்பிலேயே கோளாறு இருந்ததால், இந்தோனேஷியா விபத்திற்குப் பின் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் அந்த விமானம் பறப்பதற்குத் தடைவிதித்திருந்தன.

தற்போது மாயமாகியிருக்கும் ஸ்ரீவிஜய விமானம் 737-500 ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானம் 1994ஆம் ஆண்டு மே மாதம் முதல் முறையாகப் பறந்தது. இன்று பிற்பகல் 2.40 மணிக்கு அவ்விமானம் மாயமாகியுள்ளது. தற்போது அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

இந்தோனேஷியாவில் அடிக்கடி மாயமாகும் விமானங்கள் – காரணம் என்ன?

ஏறாத்தாழ இரு வருடங்களுக்குப் பிறகு இந்தோனேஷியாவில் விமான விபத்து நேர்ந்துள்ளது. இந்த முறை விமானத்தின் மீது பழிபோட முடியாது என்பதால் இந்தோனேஷியாவின் விமானப் பராமரிப்பு மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

விமானச் சந்தையில் பெரிய நாடாக இருப்பதைக் காட்டிலும் விமானங்களின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதே வருங்காலத்தில் விமான விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க முடியும் என அந்நாட்டின் விமானத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.