• December
    09
    Monday

Main Area

Main



திங்கட்கிழமை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் | இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

கடந்த திங்களன்று, கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இறந்தவரின் உறவினர்கள், மருத்துவர்களின் கவனக்குறைவே நோயாளி இறந்ததற்கான காரணம் எனக்கூறி, மருத்துவர்களைத் தாக்கினர்.

doctor

தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர்கள், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கடந்த திங்களன்று முதல் கொல்கத்தாவில் அரசு பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளதால் அந்த மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 
திங்கள் முதல், முதல்வர் மம்தாவின் கோரிக்கையையும் நிராகரித்து தொடர் வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, டெல்லி, மும்பை, ஹைதராபாத் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்கள் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

doctor

வேலைநிறுத்தத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என்றும் மருத்துவர்கள் நான்கு மணி நேரத்தில் வேலைக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மம்தா நேற்று எச்சரித்திருந்தார். அதைப் பொருட்படுத்தாமல் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நீட்டித்து வருகின்ற நிலையில், இன்றுவரும் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வரும் திங்கட்கிழமை (17-06-19) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.