இயந்திரத்தில் சிக்கி பெயர்ந்த பெண்ணின் தலைப்பகுதி தோல் – அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தம்

இயந்திரத்தில் சிக்கி பெயர்ந்த பெண்ணின் தலைப்பகுதி தோல் – அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தம்

ஈரோடு

இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால், பெயர்ந்த பெண்ணின் தலை தோல் பகுதியை, அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வடக்குவீதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி கவிதா. விஜய், தனது வீட்டில் அலுமினிய தகடு செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இயந்திரத்தில் சிக்கி பெயர்ந்த பெண்ணின் தலைப்பகுதி தோல் – அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தம்

இந்த நிலையில், கடந்த வாரம் விஜய் வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்த போது, கவிதா சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தகடு வெட்டும் இயந்திரத்தில், கவிதாவின் தலைமுடி சிக்கியது. இதில், அவரது தலையின் மேல்பகுதியில் உள்ள தோல் முடியுடன் பெயர்ந்து, இயந்திரத்தின் உள் பகுதியில் சிக்கிக்கொண்டது. இதனால் வலியால் அலறி துடித்த கவிதாவை, கணவர் விஜய் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

இயந்திரத்தில் சிக்கி பெயர்ந்த பெண்ணின் தலைப்பகுதி தோல் – அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தம்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இயந்திரத்தில் சிக்கியிருந்த தசைப்பகுதியை கொண்டுவரச் செய்து, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்த முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, சுமார் 10 மணிநேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர் குமரேசன் தலைமையிலான குழுவினர், கவிதாவின் சிதைந்த தோல் பகுதியை, அவரது தலையில் மீண்டும் பொருத்தி சாதனை படைத்தனர். சிகிச்சைக்கு பின்னர், கவிதா தற்போது மருத்துவமனையில் நலமுடன் உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்த, மருத்துவ குழுவினருக்கு கவிதா குடும்பத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.