ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி பணியில் பங்கேற்கும் போராட்டம்! – மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

 

ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி பணியில் பங்கேற்கும் போராட்டம்! – மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை கறுப்பு பட்டை அணிந்து பணியில் பங்கேற்கும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கூட்டமைப்பு சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு, வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி பணியில் பங்கேற்கும் போராட்டம்! – மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
7 அம்ச கோரிக்கையாக, செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா தடுப்புப் பணியில் அசல் வீரர்களுக்கு தேவையானவற்றை அரசு செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.