• February
    26
    Wednesday

Main Area

Main



சிறார் பாலியல் வீடியோக்களைப் அப்லோட் செய்தவர்கள் லிஸ்டில் டாக்டர்கள், தொழிலதிபர்கள்... அதிர்ச்சி தகவல்!

மாதிரி படம்
மாதிரி படம்

குழந்தைகள் வதை வீடியோக்களை பதிவேற்றம் செய்வது, ஷேர் செய்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது, இந்த லிஸ்டில் பெரிய பெரிய தொழிலதிபர்கள், டாக்டர்கள் கூட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சிறார் வதை வீடியோக்களை பதிவிட்டதாக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிறார் வதை வீடியோக்களை பதிவிட்டது தொடர்பாக தொழிலதிபர்கள், டாக்டர்கள் உள்பட 15 பேரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுவருவதாக பரபரப்ப தகவல் வெளியாகி உள்ளது.

christoper

திருச்சியில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரின் முகநூல் பக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் அவரை பின் தொடர்கின்றனர். அவர்கள் யார், அவர்களின் முகவரி என்ன என்று போலீசார் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். இவர்களில் 15 பேர் அதிக அளவில் குழந்தைகள் வதை வீடியோக்களை பகிர்ந்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி, கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.;.

ban

இந்த 15 பேரில் தொழிலதிபர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் உள்ளதாகவும் அவர்களை கைது செய்வது கொஞ்சம் சவாலான காரியம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.