கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வந்தது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவின் தீவிரத்திலிருந்தே இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என மூன்று புதிய தொற்றுகள் ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

தென் மாநிலங்களை விட வட மாநிலங்களிலேயே இந்தத் தொற்று அதிகளவில் ஏற்படுகிறது. இதில் இருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால் கொரோனா போல இதற்கு பரவும் தன்மை கிடையாது. மிகவும் அரிதான நோயான இது கொரோனாவுக்குப் பிறகு அதிதீவிர நோயாக மாறியுள்ளது. எளிதில் கண் பார்வையை இழக்க வைக்கிறது. சில நேரம் உயிரையும் பறித்துவிடுகிறது. அரிதான நோய் என்றாலும் அபாயகரமான நோயாகப் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

பீகார் மாநிலமும் மிகக் கடுமையாக இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் பாட்னாவில் ஒருவருக்கு மூளையிலிருந்து கருப்பு பூஞ்சை நீக்கப்பட்டுள்ளது. அணில் குமார் (60) என்ற நோயாளிக்கு தலைவலி அடிக்கடி வந்திருக்கிறது. இதையடுத்து அவர் இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

தலையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் கருப்பு பூஞ்சை கூட்டம் ஆக்கிரமித்திருந்ததும் தெரியவந்தது. இதற்குப் பின் அவருக்கு மூன்று மணி நேரம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் மூளையிலிருந்து கிரிக்கெட் பந்து அளவிலிருந்த கருப்பு பூஞ்சை நீக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.