டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி? மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை!

 

டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி? மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை!

நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சல் தலைத்தூக்க தொடங்கி விட்டது. பெரும்பாலும் குழந்தைகளையே தாக்கும் டெங்கு காய்ச்சலுக்கு முறையான மருந்து இல்லை என்பது தான் மக்களிடையே பீதியை அதிகரிக்கச் செய்கிறது. ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை குறைத்து மரணம் அடையச் செய்யும் கொடிய டெங்கு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை எவ்விதம் காத்துக் கொள்ள வேண்டும் என சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி? மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை!

கொரோனாவால் பாதிக்கப்படும் 95% குழந்தைகள் அதிலிருந்து மீளுகின்றனர். அதே போன்று தான் டெங்கு காய்ச்சலும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கவர்களை எளிதில் தாக்கும் டெங்கு, மிகப்பெரிய உடல்நிலை மாற்றத்தை உருவாக்கும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்கள் அதிகளவு தாக்கப்படுவது இல்லை. சுத்தமான நீரில் உருவாகும் இந்த டெங்குவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி? மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை!

அதே போல மழைக்காலத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்றும் சுத்தமான உணவு மற்றும் சுகாதாரம் இருந்தால் எந்த நோயில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும், காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் டெங்கு காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.