உயிருக்கு போராடிய வளர்ப்பு நாயை காப்பாற்றிய டாக்டர்! பதறவைக்கும் வீடியோ..!  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஉயிருக்கு போராடிய வளர்ப்பு நாயை காப்பாற்றிய டாக்டர்! பதறவைக்கும் வீடியோ..! 

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

நீங்கள் செல்லப்பிராணியை வளர்பவராக இருந்தால் அதனை மிகவும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டியது ரொம்ப அவசியம். குறிப்பாக உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கும் ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்று பலரையும் அதிர வைத்திருக்கிறது! உங்கள் குடியிருப்பில்  லிஃப்ட்  வசதி இருந்தால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டடிய செய்தி இது.

lift

தம்பா விரிகுடாவில் உள்ள ஒலிம்பஸ் ஹார்பர் தீவு குடியிருப்பின் வராந்தாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.நாயின் உரிமையாளர் லிஃப்டை விட்டு வெளியேறும் போது  நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த  சங்கிலி கயிறு லிஃப்ட்டின் கதவில் சிக்கிக்கொண்டது,லிஃப்ட்டின் கதவுகள் தானாகவே  மூடிக்கொண்டு மேல் நோக்கி நகரத்தொடங்கியதும் நாயும் சங்கிலியோடு மேலே இழுத்துச் செல்லப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த நாயின் உரிமையாளர் தனது நாயை லிஃப்ட்டிலிருந்து தனது நாய்க்குட்டியை விடுவிக்க போராடுகிறார். கொஞ்சம் விட்டிருந்தால் நாய் மேலே இழுத்துச்செல்லப்பட்டு  அதன் தலை மேல் சுவரில் இடித்து இறந்திருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் இருந்த மருத்துவர் முஹம்மது அவாத் என்பவர் தனது பாக்கேஜுகளை எடுத்துக்கொண்டு செல்லும்போது நாயின் உரிமையாளர் அதனை காப்பாற்ற முயற்சி செய்வதை பார்த்து இவர் விரைந்து நாயை அதன் சங்கிலியால் கடுமையாக இழுத்து அதன் உயிரை காப்பாற்றிஇருக்கிறார்.

dog

பதறவைக்கும் இந்த வீடியோ காட்சியை,முஹம்மதின் சகோதரர் இந்த தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.