சிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட மருத்துவர்- எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம்

சிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட மருத்துவர்- எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம்

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க நோயாளியிடம் லஞ்சம் பெற்ற மருத்துவரை கண்டுத்து நலப்பணிகள் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட மருத்துவர்- எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம்

திண்டுக்கல் அடுத்த ம.மு.கோவிலூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சையது அபுதாஹிர்(50). இவருக்கு வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் எடுக்க அறிவுறுத்திய மருத்துவர், அரசு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற 100 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் லஞ்சம் பெற்ற மருத்துவரை கண்டித்து மருத்துவமனையில் உள்ள நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் நலப்பணிகள் இணை இயக்குநரிடம் புகார் அளித்தார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட மருத்துவர்- எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம்