டாக்டர் பொறுப்பை விடுத்து திமுகவில் சேர..முதல்வர் பின்னால் சென்றுவிட… கோவை ESI டீன் ரவீந்திரன் தடாலடி

டாக்டர் பொறுப்பை விடுத்து திமுகவில் சேர..முதல்வர் பின்னால் சென்றுவிட… கோவை ESI டீன் ரவீந்திரன் தடாலடி

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா வார்டுக்குள் சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு, அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கொடுத்து வந்தார். இதனால் முதவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டாக்டர் பொறுப்பை விடுத்து திமுகவில் சேர..முதல்வர் பின்னால் சென்றுவிட… கோவை ESI டீன் ரவீந்திரன் தடாலடி

இதுகுறித்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். ரவீந்திரன் மனம் திறந்துள்ளார். கொரோனா நோயாளிகளிடம் பேசியபோது, ‘’நான் உங்கள் அப்பா மாதிரி. பயப்படாதீர்கள்..நான் பார்த்துக்கொள்கிறேன்’’என்று நம்பிக்கை தந்தார் முதல்வர் என்கிறார் ரவீந்திரன்.

’’இங்குள்ள டாக்டர்கள் சிலர், 30 வயதுக்குள் உள்ளனர். இளம் வயதில் ஒருவர் இறந்துவிட்டார். அவரது இறப்பை பார்த்து, அப்செட் ஆனேன் என்று என்றேன். அதற்கு அவர், ‘’பயப்படாதீங்க. நான் உங்களுக்கு அப்பா மாதிரி’’ என்றார்.

டாக்டர் பொறுப்பை விடுத்து திமுகவில் சேர..முதல்வர் பின்னால் சென்றுவிட… கோவை ESI டீன் ரவீந்திரன் தடாலடி

நோயாளிகளிடம் , நீங்கள் எந்த ஊர்? என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்று கேட்கிறார். உடனே ஒரு நோயாளி, ’’இந்த மாதிரி ஒரு சிகிச்சை எத்தனை லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது’’ என்று சொல்லிக்கொண்டே கையெடுத்து கும்பிடுகிறார்.

என்ன சிகிச்சை கொடுக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். நான் விளக்கிச்சொன்னேன். பிபி கிட் போட்டிருப்பதால் நான்சொன்னதில் முதல்வருக்கு பாதிதான் கேட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால், செய்தியாளர்களிடம் பேசியபோது, நான் சொன்னதை அப்படியே சொல்கிறார்.

டாக்டர் பொறுப்பை விடுத்து திமுகவில் சேர..முதல்வர் பின்னால் சென்றுவிட… கோவை ESI டீன் ரவீந்திரன் தடாலடி

ஒரு முதல்வராக மட்டுமல்லாமல், ஒரு டாக்டர்மாதிரியும் அவர் பேசுகிறார். அம்மா மாதிரி பேசுகிறார். அப்பா மாதிரி பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து நானே நெகிழ்ந்து போயிருக்கிறேன். பேசாமல், இந்த டாக்டர் பொறுப்பை விடுத்து, திமுகவில் சேர்ந்துவிடலாமா என்கிற எண்ணத்திற்கு வந்துவிட்டேன்’’ என்றார் தடாலடியாக.

முதலமைச்சரின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் பொறுப்பை விடுத்து திமுகவில் சேர..முதல்வர் பின்னால் சென்றுவிட… கோவை ESI டீன் ரவீந்திரன் தடாலடி

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மட்டுமல்லாது, கோவை வந்த முதல்வரிடம், நேரடியாகவும் இதை சொல்லி இருக்கிறார் ரவீந்திரன்.

இ.எஸ்.ஐ., மருத்துவமனை வந்த முதல்வர் ஸ்டாலினிடம், ’’பயப்படாதீங்க. நான் உங்களுக்கு அப்பா மாதிரி’’என்று சொன்னதும், ’’உங்கள் பின் வந்துவிட தோன்றுகிறது’’ என்ற தனது எண்ணத்தை சொல்லி இருக்கிறார்.

டாக்டர் பொறுப்பை விடுத்து திமுகவில் சேர..முதல்வர் பின்னால் சென்றுவிட… கோவை ESI டீன் ரவீந்திரன் தடாலடி

இதனால், ஒரு மருத்துவமனையின் முதல்வர், அரசு பணியில் இருப்பவர் இப்படி சொல்லலாமா என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. அது குறித்து ரவீந்திரன், ’’இது விதிமுறை மீறல் என்றால் நடவடிக்கை என்னவோ, அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்’’என்கிறார் அழுத்தமாக.