கையைக் கழுவுங்கள் சென்னைவாசிகளே! – டாக்டர் ராமதாஸ் அட்வைஸ்

 

கையைக் கழுவுங்கள் சென்னைவாசிகளே! – டாக்டர் ராமதாஸ் அட்வைஸ்

கொரோனா பரவலைத் தடுக்க வெளியே செல்வது அவசியம்தானா என்று சிந்திக்க வேண்டும், வெளியே சென்று வந்ததும் கையை கழுவ வேண்டும் என்று சென்னைவாசிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அட்வைஸ் செய்துள்ளார்.

கையைக் கழுவுங்கள் சென்னைவாசிகளே! – டாக்டர் ராமதாஸ் அட்வைஸ்
Chennai: Thermal screening being conducted in the wake of deadly coronavirus, at Chennai airport, Tuesday, March 17, 2020. (PTI Photo/R Senthil Kumar)(PTI17-03-2020_000204A)

சென்னையில் கொரோனாத் தொற்று குறைந்தது போல இருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக வரும் முடிவுகள் மகிழ்ச்சியைத் தரும் அளவில் இல்லை. தினமும் 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில் அவர்கள் மூலம் எத்தனை பேருக்கு பரவியதோ என்ற அச்சமும் எழுகிறது. சென்னையில் கொரோனா குறைந்துவிட்டது என்று அதிகாரிகள் கூறினாலும் அரசு வெளியிடும் பட்டியல் அப்படி கூறுவதாக இல்லை.

இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று ட்வீட் ஒன்றை வெளியிட்டிருப்பது பரவல் மீண்டும் உயரத் தொடங்கிவிட்டதா என்ற அச்சத்தை மேலும் ஏற்படுத்தியுள்ளது. அந்த ட்வீட் பதிவில், “தமிழக மக்களே, குறிப்பாக சென்னைவாசிகளே…. வெளியில் செல்கிறீர்களா, அது அவசியம் தானா என ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள். சென்று தான் ஆக வேண்டும் என்றால் தூய்மையான முகக்கவசம் அணிந்து செல்லுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வீட்டுக்கு வந்தவுடன் கைகளை கழுவுங்கள்!” என்று கூறியுள்ளார்.