Home இந்தியா உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

பஹ்ரைச்: உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் 65 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறந்தார். இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவால் இறந்த முதல் மருத்துவராக அவரது பெயர் பதிவானது. ஜார்வால் பகுதியில் வசிக்கும் டாக்டர் ஜாகீர் ஆலம் என்பவருக்கு நீரிழிவு மற்றும் இதய நோய் இருந்தது. அவர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) லக்னோவில் உள்ள எரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் நேற்று அவர் கொரோனாவால் இறந்ததாக தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) டாக்டர் சுரேஷ் சிங் தெரிவித்தார். இதையடுத்து அந்த மருத்துவர் ஜார்வாலின் டக்கியா வட்டாரத்தில் தங்கியிருந்த உள்ள குடியிருப்பு சீல் வைக்கப்பட்டது. மேலும் அவரது நெருங்கிய உறவினர்களின் மாதிரிகள் கொரோனா சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 60 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...

தொடர் உடற்பயிற்சி சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்!

தொடர் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு மிகப்பெரிய அளவில் குறைகிறது என்று மீண்டும் ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்வதால் ஏராளமான நன்மைகள்...

முதல்வருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு- தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட...

வைகோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது… மதிமுக 6 இடங்களில் போட்டி!

தொடக்கம் முதலே திமுக-மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முட்டிக்கொண்டு தான் இருந்தது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இரு குழுக்களும் இடையே கடும் விவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே மதிமுக கூட்டணியிலிருந்து...
TopTamilNews