இறந்த குழந்தை -கோபமுற்ற உறவினர்கள் -அடுத்து டாக்டருக்கு நேர்ந்த கதி

 

இறந்த குழந்தை -கோபமுற்ற உறவினர்கள் -அடுத்து டாக்டருக்கு நேர்ந்த கதி


டெங்குவால் குழந்தை இறந்ததால் கோபமுற்ற உறவினர்கள் அந்த டாக்டரை தாக்கியதால் கைது செய்யப்பட்டனர்
கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தின் தாரிகேர் நகரில் உள்ள பசாவேஸ்வரா மருத்துவமனையில் 6 வயது குழந்தை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தது .டாக்டர் தீபக் என்பவர் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தார்.இந்நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது .அதனால் அந்த குழந்தையின் உறவினர்கள் அந்த டாக்டர்தான் இந்த இறப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்கள் அதன் பிறகு அந்த டாக்டர் மே 31 ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த குழந்தையின் உறவினர்கள் நாலு பேர் அந்த டாக்டரை கடுமையாக தாக்கினர் .இதனால் அந்த டாக்டர் காயமுற்று அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .இப்போது அந்த மருத்துவர் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் டாக்டர்கள் கூறினர் .அந்த மருத்துவரை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கர்நாடகாவில் வசிக்கும் மருத்துவர்கள் சங்கம், மாநிலத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கோரி முதல்வர் பி எஸ் யெடியுரப்பாவுக்கு கடிதம் எழுதியது.
மேலும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதளைச் சமாளிக்க மாநில அளவிலான சட்டக் கலத்தை அமைக்கவும் அந்த மருத்துவர்கள் சங்கம் கோரியுள்ளது.

இறந்த குழந்தை -கோபமுற்ற உறவினர்கள் -அடுத்து டாக்டருக்கு நேர்ந்த கதி