darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



ஒடிசாவில் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் : முதல்வர் நவின் பட்நாயக் வழங்கினார்!

கமல்-நவின் பட்நாயக்
கமல்-நவின் பட்நாயக்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் பத்மஸ்ரீ, பத்மபூஷன், கலைமாமணி, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.  அந்த வரிசையில்  கமல்ஹாசனுக்கு ஒடிசா மாநில செஞ்சுரியன் பல்கலைக்கழகம்  டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக அறிவித்தது. 

kamal

இதையடுத்து நேற்று கமல்ஹாசன் ஒடிசா மாநிலத்துக்குச் சென்று அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக்கை சந்தித்தார். அப்போது கமல் ஹாசன் நவின் பட்நாயக்கிற்கு அசோகா சக்கரத்தை நினைவுப்பரிசாக அளித்தார்.

kamal

இந்நிலையில் இன்று கமல் ஹாசனுக்கு ஒடிசா மாநிலத்தின் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டத்தை அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் இன்று வழங்கினார்.

kamal

இது 60 ஆண்டு கால சினிமா பயணம்,   கலாச்சாரம் மற்றும் கலை ஆகியவற்றில் பங்களிப்பு செய்து வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.