வெள்ளிக்கிழமை ஏன் நகம் வெட்ட கூடாது தெரியுமா?

 

வெள்ளிக்கிழமை ஏன் நகம் வெட்ட கூடாது தெரியுமா?

வாரத்தில் ஏழு நாட்கள் உண்டு. இந்த ஏழு நாட்களில் வெள்ளி, செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் கடவுளுக்கு மிகவும் உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த இரண்டு நாட்களும் அம்மனுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதனால்தான் எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அது வெற்றியாக அமைய வேண்டும் என இந்த இரண்டு நாட்களில் பலரும் தங்கள் பணிகளை செய்ய தொடங்கி விடுவர்.
ஆனால் இந்த நாட்களில் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது , நகத்தை வெட்ட கூடாது என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கு காரணம் என்ன என்பதை நம்மில் பலர் யோசித்து பார்த்து இருக்க மாட்டார்கள்.

வெள்ளிக்கிழமை ஏன் நகம் வெட்ட கூடாது தெரியுமா?

உண்மையில் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் ஏன் நகம் வெட்ட கூடாது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாள். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் நாம் புதிதாக ஒரு பொருளை அடைய வேண்டும் அல்லது பெற வேண்டும். அதை தவிர்த்து நாம் நம்மிடம் உள்ள ஏதேனும் ஒரு பொருளை இழக்க கூடாது என்பது சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை ஏன் நகம் வெட்ட கூடாது தெரியுமா?

இதைக் கருத்தில் கொண்டே வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வதுண்டு. முடி, நகம் இரண்டுமே வெட்ட வெட்ட வளர்வது தானே? அதில் இழக்க என்ன இருக்கிறது ?என்று நீங்கள் கேட்கலாம் . ஆனால் அதுவும் நம் உடலில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது . இதனால் வெள்ளிக்கிழமை நம் உடலில் உள்ள இந்த அங்கத்தை நான் இழக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகிறது. இது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதா? என்று நாம் பார்த்தோமேயானால் அப்படி எதுவும் இல்லை . ஆனால் இது காலம் காலமாக நம்பிக்கையின் அடிப்படையில் நம் முன்னோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்கக்கூடாது என்று சொல்வார்கள். அதுவும் இந்த நம்பிக்கைக்குள் அடங்கும்.