தோனி 1929 மணிக்கு ஏன் ஓய்வை அறிவித்தார் தெரியுமா? #Dhoni

 

தோனி 1929 மணிக்கு ஏன் ஓய்வை அறிவித்தார் தெரியுமா? #Dhoni

தோனி எனும் சொல் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமானதாகும். அதுவும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியதே.

அப்படி என்ன ஸ்பெஷல் என்றால், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ‘ஒருநாள் உலககோப்பை’ யை வென்று உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இது நடந்தது 198 ஆம் ஆண்டில். அதன்பிறகு அசாருதீன், கங்குலி உள்ளிட்ட பல திறமையான வீரர்களின் தலைமையில் இந்திய அணி உலககோப்பை தொடரில் விளையாடியும் கோப்பையை வசப்படுத்த முடியவில்லை.

தோனி 1929 மணிக்கு ஏன் ஓய்வை அறிவித்தார் தெரியுமா? #Dhoni
 (Photo by Satish Bate/Hindustan Times via Getty Images)

28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது தோனியின் கேப்டன் ஷிப்.

டி20 முதல் உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும் மஹேந்திர சிங் தோனிதான். இனி எத்தனை அணி கோப்பையை வென்றாலும் முதல் அணியின் தலைவன் எனும் பெயர் தோனிக்கே.

தோனி 1929 மணிக்கு ஏன் ஓய்வை அறிவித்தார் தெரியுமா? #Dhoni

இன்னும் எத்தனை எத்தனை புகழ்களைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இன்னும் ஓராண்டு சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை தனது ஓய்வை அறிவித்து விட்டார் தோனி. அதுவும் சரியாக முன்னிரவு 7.29 மணிக்கு.

தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகள் மெல்ல குறையத் தொடங்கியதும், அவர் ஏன் 7.29 மணியை ஓய்வை அறிவிப்பதற்கு தேர்ந்தெடுத்தார். அதையும் 1929 என்று ஏன் எழுதினார் என்ற கேள்வியும் எழுந்தது.

தோனி 1929 மணிக்கு ஏன் ஓய்வை அறிவித்தார் தெரியுமா? #Dhoni

உலகின் தென்பகுதி நாடுகளில் பெரும்பாலும் சூர்ய அஸ்தமன நேரம் இதுவே. மேலும், 1929 என்று ஏன் குறிப்பிட்டார் என்றால், இப்படிக் குறிப்பிடுவது ராணுவ நடைமுறை. தோனி இந்திய ராணுவத்தின் மீது மிகப் பெரிய மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பதால் இப்படிக் குறிப்பிட்டார் என்றும் கூறப்படுகிறது.