ஜோ பைடன் வெள்ளை மாளிகை அதிகாரியாக நியமித்தது யாரைத் தெரியுமா?

 

ஜோ பைடன் வெள்ளை மாளிகை அதிகாரியாக நியமித்தது யாரைத் தெரியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி முடிவடைந்தது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள். நான்கைந்து நாட்களாக முடிவில் இழுபறி நீடித்தது. இறுதியாக, பலரும் கணித்த ஜோ பைடன் அதிபராகும் மெஜாரிட்டியைப் பெற்றார்.

ஆனாலும், தனது தோல்வியை டொனால்டு ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்ததாக ஏராளமான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்திருந்தார் ட்ரம்ப். இந்நிலையில் தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களை உடனே விசாரிக்கும்படி அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஆணையிட்டுள்ளனர்.

ஜோ பைடன் வெள்ளை மாளிகை அதிகாரியாக நியமித்தது யாரைத் தெரியுமா?

இது பக்கம் இருந்தாலும் ஜோ பைடன் தீவிரமாக அரசியல் பணிகளில் இறங்கிவிட்டார். அமெரிக்காவின் முக்கிய பிரச்னையான கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒரு மருத்துவக் குழுவை அமைத்திருக்கிறார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் இருக்கிறார்.

ஜோ பைடன் வெள்ளை மாளிகை அதிகாரியாக நியமித்தது யாரைத் தெரியுமா?

இப்போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு தலைமை அதிகாரியாக ரோன் கெயின் என்பவரை நியமித்திருக்கிறார். இது பலருக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. ஏனெனில், ரோன் கெயின் பல வருடங்களாக ஜோ பைடனின் உதவியாளராக இருந்தவர். அதனால், சிலர் விமர்சனம் கூறினாலும், பத்தாண்டுக்கு முன் அமெரிக்காவில் ஏற்ப்பட்ட சுகாதார பிரச்னையின்போது அதனை முழுமையாக கலைய தீவிரமாக இயங்கியவர் என்பதால் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தரப்பு சொல்கிறது.