6 ஆண்டுகளில் ஃபைனலில் மோதிய அணிகள் எவை தெரியுமா? – ISL கால்பந்து

 

6 ஆண்டுகளில் ஃபைனலில் மோதிய அணிகள் எவை தெரியுமா? – ISL கால்பந்து

இந்திய கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ISL கால்பந்து திருவிழா இன்று தொடங்கி விட்டது. இன்று முதல் மார்ச் மாதம் வரை 115 போட்டிகளில் அனல் பறக்கும் ஆட்டங்களைக் காணவிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ISL கால்பந்து தொடர் என்பது 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 ஆண்டுகளில் நடந்த இறுதிப் போட்டிகளில் மோதிக்கொண்ட அணிகள் எவை… எந்த அணி போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் ஆனது என்பதைப் பார்ப்போம்.

6 ஆண்டுகளில் ஃபைனலில் மோதிய அணிகள் எவை தெரியுமா? – ISL கால்பந்து

முதல் ஆண்டான 2014 –ல் கொல்கத்தாவும் கேரளாவும் மோதின. அதில் 1 – 0 எனும் கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி ஐ.எஸ்.எல் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது கொல்கத்தா.

இரண்டாம் ஆண்டான 2015 –ல் சென்னை அணியோடு இறுதிப்போட்டியில் மோதியது கோவா. இந்த ஆட்டம் பரப்பாக நடந்தது. கோல்கள் இருதரப்பிலும் அடிக்கப்பட்டன. இறுதியில் சென்னை 3-2 எனும் கோல் கணக்கில் சாம்பியனாகியது.

6 ஆண்டுகளில் ஃபைனலில் மோதிய அணிகள் எவை தெரியுமா? – ISL கால்பந்து

மூன்றாம் ஆண்டான 2016 –ல் மீண்டும் கொல்கத்தாவும் கேரளாவும் மோதின. முதல் ஆண்டில் தோற்றதைத் திரும்ப பெற கடுமையாகப் போராடியது கேரளா. ஆனாலும், அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா இரண்டாம் முறையாக சாம்பியம் பட்டம் வென்றது.

நான்காம் ஆண்டான 2017 –ல் சென்னை அணியோடு இறுதிப் போட்டியில் களம் கண்டது பெங்களூரு அணி. இதிலுல் கோல்கள் பல அடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விருந்தானது. ஆனால், வெற்றி சென்னை அணி பக்கமே இருந்தது. 3- 2 எனும் கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை.

6 ஆண்டுகளில் ஃபைனலில் மோதிய அணிகள் எவை தெரியுமா? – ISL கால்பந்து

ஐந்தாம் ஆண்டான 2018 –ல் மீண்டும் இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றது பெங்களூரு. ஆனால், இம்முறை அதை எதிர்கொண்டது கோவா. அதனால், 1-0 எனும் கோல் கணக்கில் முதன்முறையாகக் கோப்பையை வென்றது பெங்களூரூ அணி.

ஆறாம் ஆண்டான 2019 –ல் சென்னை அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது கொல்கத்தா அணி. கொல்கத்தாவுக்கு செம டஃப் கொடுத்தது சென்னை. ஆனாலும் இறுதியில் 3 – 1 எனும் கணக்கில் கொல்கத்தா மூன்றாம் முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றது.

6 ஆண்டுகளில் ஃபைனலில் மோதிய அணிகள் எவை தெரியுமா? – ISL கால்பந்து

இதுவரை நடந்திருக்கும் ஆறு தொடர்களில் கொல்கத்தா 3 முறையும், சென்னை 2 முறையும், பெங்களூரூ 1 முறையும் கோப்பையை வென்றிருக்கின்றன.