புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகளவில் அதிக கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்திலுள்ளது இந்தியா. ஆனால், கடந்த ஒரு மாதமாக புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது.

வடமாநிலங்கள் சிலவற்றில் கொரோனா இரண்டாம் அலை வீசி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5 லட்சத்துக்கும் குறைவாக,4,35,603 என்ற அளவில் உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4.60 சதவீதம்.

தினசரி பாதிப்பைவிட, தினசரி குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 11,349 குறைந்துள்ளது. 31,118 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

கடந்த 24 மணி நேரத்தில் 41,985 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை, 88,89,585 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 93.94 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 482 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் தினசரி கொரோனா நிலவர அறிவிப்பின் படி, புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு ஒன்பதாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் டெல்லி உள்ளது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

தினசரி கொரோனா நோயாளிகள் குணமடவதில் கேரளா முதலிடத்திலும் டெல்லி இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு முதல் பத்து இடத்தில் இல்லை. அதிக மரணங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலிலும் தமிழ்நாடு முதல் பத்து இடத்தில் இல்லை.