தினசரி புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

தினசரி புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 79 லட்சத்து  10 ஆயிரத்து 511 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 01 லட்சத்து 08 ஆயிரத்து 847 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 77 ஆயிரத்து 745 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  

தினசரி புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மார்ச் முதலே கடுமையாக இருந்து வருகிறது. லாக்டெளன் அறிவிக்கப்பட்டும் பெரிய அளவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியவில்லை.

தினசரி புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் நோய் தொற்றினால் 46,232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 4,39,747 பேர் கொரோனா  நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 49,715  பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 564 பேர் நோய்  தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தினசரி நோயாளிகள் குணமடையும் மாநிலங்களில் பட்டியலில் நேற்றைய கணக்கின்படி தமிழ்நாடு எட்டாம் இடத்தில் உள்ளது. தினசரி புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் தமிழ்நாடு பத்தாம் இடத்தில் உள்ளது.  சமீப நாட்களாக ஏழு, எட்டு, ஒன்பது என பின் வரிசையில் இருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

தினசரி புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

தினசரி கொரோனா இறப்பில் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு எட்டாம் இடத்தில் உள்ளது.