தோனியின் 200 வது ஐபிஎல் போட்டி என்றைக்கு தெரியுமா? எதிர்த்து ஆடும் அணி இதுதான்

தோனியின் 200 வது ஐபிஎல் போட்டி என்றைக்கு தெரியுமா? எதிர்த்து ஆடும் அணி இதுதான்

ஐபிஎல் கொண்டாட்டங்கள் தொடங்க இன்னும் நான்கு நாட்களே இருக்கின்றன. ஐபிஎல் திருவிழாவுக்காக ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் எனப் பலரால் கணிக்கும் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ். அதிரடி வீரர்களால் இதுவரை மூன்று முறை ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தைத் தட்டி வந்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

தோனியின் 200 வது ஐபிஎல் போட்டி என்றைக்கு தெரியுமா? எதிர்த்து ஆடும் அணி இதுதான்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணம் நம் கூல் கேப்டன் மஹேந்திர சிங் தோனிதான். ஆட்டத்தின் போக்கை உணர்ந்து வழிநடத்துவதோடு, தேவைபடும்போது அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்துவார்.

தோனி ஒரு போட்டியை மிகச் சிறப்பாக ஃபினிஷ் செய்பவர் என்பது எல்லோருக்குமே தெரியும். அந்தப் பழக்கத்தை நானும் மேற்கொள்ள விருக்கிறேன் என்று டேவிட் மில்லர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

தோனியின் 200 வது ஐபிஎல் போட்டி என்றைக்கு தெரியுமா? எதிர்த்து ஆடும் அணி இதுதான்

2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே கேப்டன் தோனிதான். வேறு எந்த அணியிலும் இப்படி ஒரே கேப்டன் இத்தனை ஆண்டுகள் நீடித்தது இல்லை. இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் தடை செய்யப்பட்டபோது புனே அணியில் ஆடினார் தோனி.

இதுவரை ஐபிஎல் தொடர்களில் மொத்தம் 190 போட்டிகளில் தோனி ஆடியிருக்கிறார். எடுத்த ரன்கள் 4432. இதில் 23 அரை சதங்களும் 297 ஃபோர்களும் 209 சிக்ஸர்களும் விளாசியது அடக்கம்.

தோனியின் 200 வது ஐபிஎல் போட்டி என்றைக்கு தெரியுமா? எதிர்த்து ஆடும் அணி இதுதான்

ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச ரன் 84. மிடில் ஆர்டரில் இறங்கும் ஒரு பேட்ஸ்மேனோடு தோனியின் ரன்களை ஒப்பிட்டால் தோனியின் அதிரடியின் பலம் புரியும்.

தோனி இதுவரை 190 ஐபிஎல் போட்டிகள் ஆடியிருக்கிறார். வரும் சனிக்கிழமை மும்பை அணியோடு தோனி ஆடவிருப்பது 191 வது போட்டி. அப்படிப் பார்க்கையில், தோனியின் 200 வது ஐபிஎல் போட்டியை அக்டோபர் மாதம் 19-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் டீமோடு ஆடவிருக்கிறார்.

தோனியின் 200 வது ஐபிஎல் போட்டி என்றைக்கு தெரியுமா? எதிர்த்து ஆடும் அணி இதுதான்

தோனியைப் போல ஆட விரும்பிய டேவிட் மில்லர் இருக்கும் டீம் ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் உள்ளிட்டோர் அடங்கிய டீம்.