Home சினிமா ரியோ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற நினைத்த காரணம் என்ன தெரியுமா?

ரியோ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற நினைத்த காரணம் என்ன தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4 இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர போகிறது. ஆரி, ரியோ, கேபி, ரம்யா, பாலா, சோம் இந்த ஆறு பேரும்தான் பிக்பாஸ் வீட்டின் இறுதிப் போட்டியாளர்கள். இவர்களில் நேற்று கேபி வெளியேறினார். அதாவது பிக்பாஸ் ஒரு டீல் வைத்தார். பிக்பாஸ் டைட்டிலுக்குப் போட்டிப் போடுவதைத் தவிர்த்து நாங்கள் கொடுக்கும் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேற ரெடியா என்றார். அதற்கு கேபி ஒத்துக்கொண்டு பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

கேபியோடு அந்தப் பணத்திற்கு போட்டிப் போட்டது ரியோ. இது பலருக்கும் ஆச்சர்யம். அர்ச்சனா அண்ட் கோ ரியோதான் டைட்டில் வின்னர் என நினைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேற நினைத்த காரணம் ஏன் என்று பலவாறு அலசப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் உறவினர்கள், சிறப்பு விருந்தினர்கள் என யார் வந்தாலும், வெளியே என்ன நடக்கிறது… போட்டியாளர்களை வெளியிலிருந்து எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்து சொல்லக்கூடாது என்பது அடிப்படை விதி. ஆனால், இந்த விதி இந்த சீசனில் பின்பற்றப் பட வில்லை. இந்த வாரத்தின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் போட்டியாளர்களாக வந்தனர். வந்த உடனே கிளம்ப வில்லை. நான்கைந்து நாட்கள் தங்கியிருக்கிறார்கள். அதனால், பேச்சின் வழியாக வெளியே இருக்கும் சூழலை எல்லாம் சொல்லிவிட்டதாகவே தெரிகிறது.

ரம்யாவிடம் ஒருமுறை பேசும் பாலா, “ரம்யா நீங்க டைட்டில் வின் பண்ணுவீங்கன்னு பார்த்தா விஷப் பாட்டில்னு பெயர் வாங்கிட்டீங்க?” என்று கேட்கிறார்கள். ஆரி ரசிகர்கள் ரம்யாவை அப்படிச் சொல்லி சமூக ஊடகத்தில் ட்ரோல் செய்கிறார்கள். இது எப்படி வீட்டுக்குள் இருக்கும் பாலாவுக்குத் தெரிந்தது. இனிமேல் ரம்யா தான் டைட்டில் வெல்லுவோம் என்று எப்படி நம்புவார். எப்படி உற்சாகத்தோடு போட்டியை எதிர்கொள்வார்.

ஆரி ஆர்மியின் அலப்பறைகளை முழுமையாக வீட்டுக்குள் இருப்பவர்களிடம் சொல்லப்பட்டிருந்தால் ரம்யா மட்டுமல்ல மற்ற போட்டியாளர்களுக்கு இது அலுப்பைத் தந்திருக்கும். அதனால்தான் என்னவோ கேபி 5 லட்சம் டீல்க்கு ஓகே சொன்னார்போல. ஒருவேளை இது நன்கு தெரிந்ததால்தான் ரியோ 5 லட்சத்துக்கு கேபியோடு போட்டிப் போட்டிருக்கக்கூடும்.

இப்படி விதிகளை மீறுவதை பிக்பாஸ் குழு எப்படி அனுமதிக்கிறது என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனெனில், இந்தப் போட்டியின் விதிகள் மீறப்படும்போது சரி செய்ய வேண்டியது அக்குழுவே.

ஏற்கெனவே பிக்பாஸ் டீம் + கமல்ஹாசன் ஆரிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள் என்ற பார்வையும் உண்டு. பாலாவை ஆம்பளையாக இருந்தால் தொடு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆரி திட்டும்போது கமல்ஹாசன் அதைக் கடுமையாகக் கண்டிக்கவே இல்லை. சம்யுக்தா ஒருமுறை ‘வளர்ப்பு’ எனும் சொல் சொன்னதற்கு குறும்படம் வரை சென்றவர் சென்ற வாரம் மொழி ஜாலத்தில் கடந்து போயிருந்தார்.

இதெல்லாம் வைத்துப்பார்க்கையில் ஆரியைத் தவிர்த்த மற்றவர்களின் மன உறுதியைச் சீர்குலைத்து விட்டனர் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் முன்னாள் போட்டியாளர்கள்.

இதுக்குப் பதில் போட்டியாளர்களுக்கு மொபைல் கொடுத்திருக்கலாமே பிக்பாஸ்! அதில் தங்களுக்கான ரெஸ்பான்ஸைப் பார்த்து தெரிந்துகொண்டிருப்பார்களே!

மாவட்ட செய்திகள்

Most Popular

அதிமுக மீது அதிருப்தி : மக்கள் நீதி மய்யத்துக்கு தாவும் தேமுதிக?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுகவும், அதிமுகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு 22 தொகுதிகள் வழங்கப்பட...

வெடி பொருட்கள் பறிமுதல் எதிரொலி- வாளையாரில் லாரிகளில் தீவிர சோதனை!

கோவை கோவை மாவட்டம் வாளையாரில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்த நிகழ்வை அடுத்து, காய்கறி ஏற்றிச் செல்லும் லாரிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

“அம்பானி எங்க டார்கெட் இல்ல.. மோடி-அமித் ஷா தான் டார்கெட்” – பயங்கரவாத அமைப்பு பகீரங்க எச்சரிக்கை!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பங்களாவுக்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடக்கப்போவதாகக் கூறப்பட்டது. அதற்கு வெள்ளோட்டமாக சில நாட்களுக்கு முன்பு தெற்கு மும்பையிலுள்ள பிரமாண்ட அன்டிலியா வீட்டின் அருகே அடையாளம்...

சாலையோரத்தில் நின்று… நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி!

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்திருக்கும் ராகுல் காந்தி, சாலையோரம் நின்று நுங்கு சாப்பிட்ட சம்பவம் காங்கிரசார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்...
TopTamilNews