புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

 

புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

கொரோனாவின் உட்சபட்ச பாதிப்பு அதிகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகளவில் லட்சத்தைக் கடந்த மரணங்களின் எண்ணிக்கை இந்தியாவிலும்தான். ஆனால் கடந்த இரு மாதங்களாக புதிய கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது.

கடந்த பல நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,311 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஏற்படும் கொரோனா மரணங்களும் நாட்டில் பெருமளவு குறைந்துள்ளது. 229 நாள்களுக்குப் பிறகு ஒரு நாளில் 170-க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2.25 இலட்சமாக (2,22,526) உள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 2.13 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் இதுவரை மொத்தம் 1,00,92,909 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 99 இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது (98,70,383). குணமடைந்தவர்களின் வீதம் 96.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் மிகவும் அதிகமாகும்.

புதிதாக குணமடைந்தவர்களில் 78.56 சதவீதத்தினர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 4,659 பேரும், மகாராஷ்டிராவில் 2,302 பேரும், சத்தீஸ்கரில் 962 பேரும் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

80.25 சதவீத புதிய தொற்றுக்கள் 9 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. கேரளாவில் 4,545 பேரும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3,558 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினந்தோறும் கொரோனா நிலவரம் மாநில அளவிலான பட்டியலில் கொரோனாவிலிருந்து குணம் அடையும் மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

தினந்தோறும் கொரோனா நிலவரம் மாநில அளவிலான பட்டியலில் புதிய நோயாளிகள் அதிகரிப்பு பட்டியலில் கேரளா முதல் இடத்திலும் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் உள்ளது.

தினந்தோறும் கொரோனா நிலவரம் மாநில அளவிலான பட்டியலில் மரணம் அடைந்தோர்களின் பட்டியலில் முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் கேரளாவும் உள்ளன. முதல் ஆறு இடங்களில் தமிழ்நாடு இல்லை.