பருப்பு சாப்பிட்டா நெருப்பு மாதிரி இருக்கலாம் -இனி மறுப்பு சொல்லாதீங்க.

 

பருப்பு சாப்பிட்டா நெருப்பு மாதிரி இருக்கலாம் -இனி மறுப்பு சொல்லாதீங்க.

பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் ஒருவரின் அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது  ​​.  அவை புரதம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய ஆதாரமாக இருப்பதால் நீங்கள் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

பருப்பு சாப்பிட்டா நெருப்பு மாதிரி இருக்கலாம் -இனி மறுப்பு சொல்லாதீங்க.

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர்  பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை கூறுகிறார்

* முதுமையை தடுக்கிறது : –

சிலருக்கு இளம் வயதிலேயே முடி  நரைக்கும் .அந்த பிரச்சினைகள் சரியாகும்

* எலும்புகளுக்கு வலு சேர்க்கும்  –

எலும்புகளுக்கு வலு சேர்த்து அதை பாதுகாக்கிறது, பலப்படுத்துகிறது.

* நோய் எதிர்ப்பு சக்தி –

நம் உடல் கிருமி தாக்குதலுக்கு உள்ளாகும் போது ஆன்டிபாடிகளை உருவாக்க பருப்புகள் உதவுகிறது

பருப்பு வகைகள் சாப்பிடுவதற்கு சில  விதிகள் உள்ளன என்று திவேகர் கூறுகிறார்.

* சமைப்பதற்கு முன் ஊறவைத்து முளைக்க வைக்கவும்

* பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் (1: 3) / பருப்பு வகைகள் மற்றும் தினை (1: 2) ஆகிய சரியான விகிதத்தில்  சமையலில் பயன்படுத்தவும்

 சிலருக்கு பருப்பு சாப்பிட்டால்  மலச்சிக்கல், வாயு பிரச்சினைகள்  தோன்றும் .அவற்றை எளிதான முறையில்  சரிசெய்ய , பருப்பை  தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைப்பதன் மூலம் அந்த பிரச்சினைகள்  சரியாகும் என்றார் .

அது சமைக்கப்படுவதற்கு சற்று முன், ஒரு சிட்டிகை மஞ்சள், கொஞ்சம்  பெருங்காயம்  சேர்த்து, சிறிது இஞ்சியை சேர்த்து அரைக்கவும். “இந்த சமையலறை ரகசியம் பருப்பின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதனால்  ஏற்படும் செரிமான பிரச்சினைகளையும் சரி செய்யும் ” என்று அவர் கூறினார்.