உங்களுக்கு ஹைப்போ டென்ஷன் இருக்கிறதா, எச்சரிக்கை!

 

உங்களுக்கு ஹைப்போ டென்ஷன் இருக்கிறதா, எச்சரிக்கை!

ஹைப்போ டென்ஷன்… ரத்த அழுத்தக் குறைவு நிலையையே இப்படிச் சொல்லப்படுகிறது. ஹைப்பர் டென்ஷனுக்காக அதிகமாக மருந்துகள் சாப்பிடுவதால் மனிதனின் சராசரி ரத்த அழுத்தமான 120/80 என்ற நிலையிலிருந்து வெகுவாகக் குறைந்துவிடுவதையே ஹைப்போ டென்ஷன் என்கிறார்கள்.

உங்களுக்கு ஹைப்போ டென்ஷன் இருக்கிறதா, எச்சரிக்கை!
ரத்த இழப்பு…
மருந்துகள் சாப்பிடாமலே ஹைப்போ டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது, டாய்லெட்டுக்குள் நுழைவதற்குள் முன்பே சிலர் வாசலிலேயே அதிகமாக பேதியாகி விடுவார்கள். அப்போது உடலில் உள்ள எல்லா திரவச்சத்துகளையும் இழக்க நேரிடும். ரத்த அழுத்தம் குறைந்துவிடும் இந்தநிலை ஹைப்போ டென்ஷன்தான்.

உடலில் அடிபட்டு அதிகமாக ரத்த இழப்பு ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் குறைவது இயல்பே. இதுபோன்ற நேரங்களில் குளுக்கோஸ் போன்ற திரவ பானங்களை வாய் வழியாகவோ ஊசி மூலமாகவோ செலுத்தி ரத்த அழுத்தத்தை சரிசெய்வார்கள். ஒருவேளை அதிக ரத்த இழப்பு ஏற்பட்டால் உடனடியாக மாற்று ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும்.

உங்களுக்கு ஹைப்போ டென்ஷன் இருக்கிறதா, எச்சரிக்கை!இயற்கைப் பொருள்…
ரத்த அழுத்தம் குறையும்போது ஆக்சிஜன் சப்ளை குறைந்து மயக்கம் போட்டு விழ நேரிடும். மேலும் அப்போது மூளைக்கு ஆக்சிஜன் சப்ளை குறையும்பட்சத்தில் நினைவு தப்பவும் வாய்ப்பு உண்டு. எனவே, ஹைப்பர் டென்ஷனைவிட ஹைப்போ டென்ஷனிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஹைப்போ டென்ஷன் நேரத்தில் ரத்தக்குழாயை சுருக்கும் வகையைச் சேர்ந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் உடனடியாக ரத்த அழுத்தத்தைக் கூட்டலாம்.

இவைதவிர இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ரத்த அழுத்தத்தைக் கூட்டலாம். குறிப்பாக பட்டாணி சாப்பிடுவது இதற்கு உதவும். பட்டாணியில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்றவை இருக்கின்றன. எனவே, ஒட்டுமொத்த இதயப் பராமரிப்புக்கும் பட்டாணி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உங்களுக்கு ஹைப்போ டென்ஷன் இருக்கிறதா, எச்சரிக்கை!பழம், காய்கறிகள்…
நம் உடலிலிருந்து அதிக அளவில் ஸ்டார்ச் குறைவதால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும். எனவே, ஸ்டார்ச் அதிகம் உள்ள உருளைக்கிழங்கைச் சாப்பிட்டு பிரச்சினையைத் தவிர்க்கலாம். அதற்காக தொடர்ந்து உருளைக்கிழங்கு சாப்பிடுவது வேறு சில உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை.

ஆரஞ்சு மற்றும் பப்பாளி பழங்களில் நிறைய வைட்டமின் சத்துகள் இருப்பதால் குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்ய இவை உதவும். இதேபோல் கொய்யாப்பழமும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மதிய உணவு உண்பதற்கு முன் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. 60 வயதைக் கடந்தவர்கள் உணவு உண்டதும் ரத்த அழுத்தம் இயல்பாகக் குறையும். தக்காளி, அவகேடா, கேரட் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்.