உங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்!

 

உங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்!

நமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் முட்டைக்கோஸ், தன்னுள் மனித உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனை, ஜூஸாக அரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நமது உடலில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக முட்டைக்கோஸில் அதிகளவு லாக்டிக் அமிலம் இருப்பதால், குடலில் உள்ள நோய் தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது. சுவாச பாதையில் உள்ள ஒவ்வாமையையும் சரிசெய்து, ஆஸ்துமா பிரச்சினையில் இருந்து விடுபட உதவுகிறது.

உங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்!

அல்சர் பிரச்சினை இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வரும்பட்சத்தில், நோயை ஏற்படுத்திய பாக்டீரியாக்களை அழித்து குணமடைய செய்கிறது. அத்துடன், உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுத்து, கல்லீரலையும் தூய்மையடைய செய்கிறது.

முட்டைகோஸில் உள்ள க்ளூட்டமைன் என்னும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. இதனால், செரிமான கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதேபோல் இதில் உள்ள சல்ஃபோரபேன், சில வகை புற்று நோய்களின் தாக்கங்களை தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்!

முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சி பொருளானது, ஆர்த்ரிடிஸ் போன்ற உள் காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி பிரச்சனையில் இருந்து விடுபட செய்கிறது. மேலும், இதில் உள்ள க்ளுக்கோஸினோலேட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையடைய செய்வதால், நோய் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து மனித உடலை பாதுகாக்கிறது.