அடிக்கடி வாய்ப்புண் வருகிறதா? அப்போ இந்த நியூஸை படிங்க!!

 

அடிக்கடி வாய்ப்புண்  வருகிறதா? அப்போ இந்த நியூஸை படிங்க!!

வாய்ப்புண் என்பது பெரிய நோய் ஒன்றும் இல்லை. அது பெரிய அளவு எந்த பிரச்சனையும் நமக்கு கொடுக்காது. வாய்ப்புண் வந்தால் நாம் பேசும் போதும் ,சாப்பிடும் போதும் வலியை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வாய்ப்புண்ணை விரட்ட சரியான உணவு ,வழிமுறையை எடுத்துக் கொண்டால் மட்டுமே இதை முழுமையாக வராமல் தடுக்க முடியும். வாய்ப்புண் ஓரிரு நாட்களில் சரியாகும் அல்லது ஏதேனும் மருந்து எடுத்துக்கொண்டால் குணமாக வாய்ப்புண்டு. ஆனால் இது திரும்பத் திரும்ப வருவதுதான் இதிலுள்ள முக்கியமான பிரச்னை. எதனால் இந்த வாய்ப்பு வருகிறது என்பதை இந்தச் செய்தியில் காணலாம்.

அடிக்கடி வாய்ப்புண்  வருகிறதா? அப்போ இந்த நியூஸை படிங்க!!

உடலில் வைட்டமின் பி சத்து குறைவாக இருக்கும் போது வாய்ப்புண் வரும். சித்த மருத்துவத்தின படி உடலில் உள்ள வெப்பம் அதிகரிக்கும்போது வாய்ப்புண் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நம் உடலில் உள்ள ஜீரண சக்தி சரியாக இல்லாமல் போகும்போது வாய்ப்புண் ஏற்படலாம் .அத்துடன் குடலில் புண் இருக்கும் பட்சத்தில் அது வாயிலும் தோன்றும் என்றும் கூறப்படுகிறது.அதனால் குடலில் உள்ள புண்ணை நாம் முதலில் சரி செய்யும் பட்சத்தில் வாய்ப்புண் வருவதை அறவே தவிர்க்கலாம்.

அடிக்கடி வாய்ப்புண்  வருகிறதா? அப்போ இந்த நியூஸை படிங்க!!

நம் உடலில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளது. இதில் நல்ல நுண்ணுயிர்களும் இருக்கக்கூடும். அப்படி நல்ல நுண்ணுயிர்கள், நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் இல்லாமல் போகும் போதும் அல்லது அதன் எண்ணிக்கை குறையும் போதும் வாய்ப்புண் ஏற்பட அதிகம் வாய்ப்பு உண்டு.அத்துடன் பல்வேறு நோய்களுக்கு அடித்தளமாக இருக்க கூடிய மன அழுத்தம் இருந்தாலும் வாய்ப்புண் வரும் . சில மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் வாய் புண் வரும். மன அழுத்தம் மனப்பதட்டம் இருக்கும் பட்சத்தில் வாய்ப்புண் ஏற்பட நிறைய கூறுகள் உண்டு.

அடிக்கடி வாய்ப்புண்  வருகிறதா? அப்போ இந்த நியூஸை படிங்க!!

வாய்ப்புண் குறைக்கும் வழிமுறைகள் :மணத்தக்காளி கீரை, தேங்காய் பால், பாசிப்பருப்பை சேர்த்து குழம்பு வைத்து சாப்பிட்டால் உடல் சூடு தனித்து வாய்புண் வருவது குறையும். அன்றாட உணவில் மோர் எடுத்து கொள்ள வேண்டும்.

6 – 7 மணிநேரம் தூங்கும் போது மனஅழுத்தம் குறைந்து வாய்ப்புண் வருவதும் குறையும் . அப்படி உங்களுக்கு தூக்கம் சரியாக வரவில்லையென்றால் அமுக்கிரா கிழங்கை பொடித்து பாலில் கலந்து குடிக்கலாம். அதேபோல் ஜாதிக்கா பொடியை பாலில் கலந்து குடித்தாலும் தூக்கம் வரும்.

தலைக்கு குளிக்க வேண்டும் . அதுவும் வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.