நீங்கள் சரியான சோப்பு போட்டு குளிக்கிறீர்களா? – ஒரு’செக் அப்’

 

நீங்கள் சரியான சோப்பு போட்டு குளிக்கிறீர்களா? – ஒரு’செக் அப்’

நீங்கள் சரியான சோப்பு போட்டு குளிக்கிறீர்களா? – ஒரு’செக் அப்’
எல்லோருமே விளம்பரங்களைப் பார்த்துதான் குளியல் சோப் வாங்குகிறார்கள். தமிழர்களில் பெரும்பாலான பேர் சினிமா நடிகைகள் சிபாரிசு செய்யும் குளியல் சோப்பைத்தான் வாங்குகிறார்கள். இதில் ஒன்றும் சந்தேகமில்லை.ஆனால், உங்கள் சருமம் எப்படிப்பட்டதோ அதற்கு தக்கபடிதான் சோப்பு வாங்க வேண்டும். இதை விடவும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது சோப்பு என்பது அழுக்கைத்தான் அகற்றுமே தவிர மனிதர்களை அழகாக மாற்றுவதோ அல்லது சிகப்பழகாக்குவதோ செய்யாது.

நீங்கள் சரியான சோப்பு போட்டு குளிக்கிறீர்களா? – ஒரு’செக் அப்’


சோப்பு என்பது ரசாயனப் பொருள் கலந்ததுதான்.இதில் சந்தேகப்படத் தேவையில்லை. இயற்கை மூலிகை சோப் என்றாலும் அதிலும் சில வகை ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுதான் இருக்கும். பொதுவில் சோடியம் பால்மேட், சோடியம் குளோரைடு, சோடியம் பால் கெர்னலேட், பெட்ரா சோடியம், கிளிசரின், மெத்தில் சினடைல் போன்ற ரசாயனங்கள் கலந்து இருக்கும். இதனோடு தாவர கொழுப்புகளையும் நிறம் மற்றும் வாசத்திற்கான பொருட்களையும் சரியான விகிதத்தில் சேர்ப்பார்கள். இதுதான் குளியல் சோப்..

நீங்கள் சரியான சோப்பு போட்டு குளிக்கிறீர்களா? – ஒரு’செக் அப்’


முதலில் உங்கள் சருமம் எப்படிப்பட்டது எனப் பாருங்கள். எண்ணெய் சருமம், வறண்ட சருமம், வியர்வை சருமம்..இந்த மூன்றில் எது என்பதை அறியுங்கள்.. எண்ணெய் பசை நிறைந்த சருமத்திற்கு வேப்பிலை, எலுமிச்சை கலந்த சோப் நல்லது. வறண்ட சருமத்திற்கு பட்டர், வெஜிடபிள் எண்ணெய், கற்றாழை, இயற்கை எண்ணெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சோப் சிறந்தது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்களுக்கு லேவண்டர்,சிட்ரஸ்,லெமன் கிராஸ், ரோஜா ஆகியவைகளை கலந்து தயார் செய்யும் சோப் சிறந்தது.
இதையடுத்து நீங்கள் கடையில் வாங்கும் சோப்பின் தரத்தை கண்டுபிடிக்க வேண்டும். சோப்பை வாங்கியதும் பையில் எடுத்துக் கொண்டு வந்து விடாதீர்கள் பொடி எழுத்துக்களாக இருந்தாலும் சோப்பின் மேல் உறையை நன்கு படித்து பாருங்கள். அதில் சோப்பின் தரம் குறித்த டி.எப்.எம் அளவைக் குறித்திருப்பார்கள்.
இந்த டி.எப்.எம். அளவானது 75 சதவீதத்திற்கு அதிகமானது என்றால் முதல் தர சோப் . 65 முதல் 75 சதவீதம் வரை டி.எப்.எம் இருந்தால் அது நடுத்தரமானது.
65 சதவீதத்திற்கும் குறைவான டி.எப்.எம் இருந்தால் அது தரம் குறைந்த சோப் ஆகும். எனவே சோப் வாங்கும்போது டி.எப்.எம் அளவினை பார்த்து வாங்குங்கள்.

நீங்கள் சரியான சோப்பு போட்டு குளிக்கிறீர்களா? – ஒரு’செக் அப்’


அடுத்ததாக “ஜீலீ” அளவைப் பார்க்க வேண்டும்.இது 5.5 அளவிற்கு குறைந்திருக்க வேண்டும். இதுதான் சோப்பின் கார, அமிலத்தன்மையை குறிக்கும் அளவீடு ஆகும்.இதை விட முக்கியம் சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ராக்ரன்ஸ் என்ற அமிலங்களின் பெயர்கள் இருந்தால் அவற்றை வாங்காதீர்கள் இவை வீரியம் குறைந்த ரசாயனங்கள் ஆகும்.

நீங்கள் சரியான சோப்பு போட்டு குளிக்கிறீர்களா? – ஒரு’செக் அப்’


இப்படி உங்கள் உடலுக்கு ஏற்ற சோப்பை தேர்வு செய்து கொண்டு பின்னர் அவற்றை நிரந்தரமாக உபயோகித்துக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் உங்களுக்கு தோல் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற சரும பிரச்சினைகள் உருவாகலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே சோப் பயன்படுத்தி குளியுங்கள். அடிக்கடி சோப் போட்டால், சருமம் வறண்டு போகும்.
-இர.சுபாஸ் சந்திர போஸ்