• August
    18
    Sunday

Main Area

Main



’கமலைக் கிண்டலடிக்க உனக்கெல்லாம் என்ன தகுதியிருக்கு?’-பிரபல இயக்குநரை மிரட்டும் ரசிகர்கள்...

சி.வி.குமார்,கமல்
சி.வி.குமார்,கமல்
Loading...

 

cv kumar

தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரைக் கிண்டலடித்து வரும் இயக்குநர் சி.வி.குமாரை ரசிகர்கள் மிக ஆபாசமாகத் திட்டியும் மிரட்டியும் வருகின்றனர்.

tweet

 ’சூதுகவ்வும், ’பீட்ஸா’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும், ’மாயவன்’, ’கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ உள்ளிட்ட படங்களின் இயக்குனருமான சி.வி.குமார் கைவசம் சினிமா வேலைகள் எதுவும் இல்லாததால் சில வாரங்களாக ட்விட்டர் பக்கங்களில் பிசியாக இருக்கிறார். கமல் சில தினங்களுக்கு கோட்சே தொடர்பான சர்ச்சையில் சிக்கியபோது,...அறிவாளி போல் காட்டிகொண்டாலும் அவரும் அரசியல்வாதி தானே ... ஓட்டுண்ணா எல்லாம் அப்படி தான் விட்டுட்டு வேலையை பாருங்கப்பா....என்று ஒரு பதிவு போட்டு கமல் ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

tweet

 அந்தக் காயம் ஆறுவதற்கு முன்பு நேற்று கமல் கட்சியின் தேர்தல் தோல்விகள் குறித்து இன்னொரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வடிவேலு படத்துடன், "போ... போ... எல்லாம் முடிஞ்சருச்சு போ ... உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ..." என கிண்டலாகத் தெரிவித்துள்ளார். இதற்கு பின்னூட்டத்தில் பல ரசிகர்கள் மிரட்டலான கமெண்டுகள் கொடுத்துவரும் நிலையில், ஒருவர்,...Replying to @icvkumar...நி டைரக்ட் பண்ண படம் வந்ததும் தெரியல போனதும்   தெரியல நீயெல்லாம் கமல கிண்டல் பண்ற’ என்று பதிவிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.