’’விவசாய நிலத்தை அழித்து மஞ்சள் ஆராய்ச்சி மையம் தேவையா?’’ – ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

 

’’விவசாய நிலத்தை அழித்து மஞ்சள் ஆராய்ச்சி மையம் தேவையா?’’ – ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

விவசாய நிலத்தில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொடக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ., சிவசுப்பிரமணியை கண்டித்து ஈரோட்டில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுகப்பட்டி பேரூராட்சி ஐந்து கிணறு பகுதியில், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு, தென்னை, வாழை போன்ற பயிர்களை பயிரிட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில், 25 ஏக்கர் நிலப்பரப்பளவில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் மஞ்சள் வணிக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

’’விவசாய நிலத்தை அழித்து மஞ்சள் ஆராய்ச்சி மையம் தேவையா?’’ – ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் வருவாய் துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் போது, நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனையால், மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணி தொய்வு ஏற்பட்டது.

இதற்கிடையில், மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க மொடக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவசுப்பிரமணி, அதிகாரிகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை சார்பில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி(போஸ்டர்) ஒட்டியுள்ளனர். அந்த, சுவரொட்டியில் வேட்டுவக்கவுண்டர் மற்றும் நாடார் சமூக விவசாய மக்களை அழிக்க நினைக்கும் மொடக்குறிச்சி தொகுதி அ.இ.அ.தி.மு.க. எம்எல்ஏ.,வை வன்மையாக கண்டிக்கிறோம், வடுகப்பட்டியில் தரிசு நிலம் இருக்க விவசாய நிலத்தை அழித்து மஞ்சள் ஆராய்ச்சி மையம் தேவையா?, விவசாயிகளின் முதல்வர் தலையிட்டு விவசாயிகளை காப்பாற்றுவாரா? என குறிப்பிட்டுள்ளனர்.

’’விவசாய நிலத்தை அழித்து மஞ்சள் ஆராய்ச்சி மையம் தேவையா?’’ – ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

மொடக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ.,வை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.