ஏழு ஜென்ம பாவங்களை போக்க சனிக்கிழமையில் இதை செய்யுங்கள் ….!!

 

ஏழு ஜென்ம பாவங்களை போக்க சனிக்கிழமையில் இதை செய்யுங்கள் ….!!

நாம் இந்த ஜென்மத்தில் மனிதனாக பிறந்திருப்பதே முந்தைய ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைகளால் தான் என்கிறது சாஸ்திரம். நம்முடைய இந்த பிறப்பு கர்மா என்று அழைக்கப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாவங்கள் ஒருவரின் பிறப்பில், ஏழு தலைமுறை பாவமாக மாறிவிடும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் ஏழு தலைமுறையின் பாவங்களையும் பச்சரிசி போக்கும் என்று கூறியுள்ளார் காஞ்சி மகாபெரியவர்.

ஏழு ஜென்ம பாவங்களை போக்க சனிக்கிழமையில் இதை செய்யுங்கள் ….!!

ஒருவர் 7 தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும் அல்லது இந்தத் தலைமுறையில் செய்த பாவங்களும் தீர ஒரு வழி உள்ளது. சனிக்கிழமை நாளில் பச்சை அரிசியை ஒரு கைப்பிடி எடுத்து அதை பொடியாக்கி கையில் வைத்து கொண்டு, சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு இறைவனை மனதார பிரார்த்தித்து கொண்டு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

ஏழு ஜென்ம பாவங்களை போக்க சனிக்கிழமையில் இதை செய்யுங்கள் ….!!

மரத்தடி விநாயகர், தெரு முனை விநாயகர் என விநாயகரை தரிசனம் செய்து விட்டு மூன்று முறை விநாயகரை வலம் வந்து, பச்சரிசி பொடியை தூவி விடுங்கள். அந்த பொடியை நோக்கி எறும்புகள் வரிசையாக வந்து அதனை எடுத்துச் சல்லும். நீங்கள் போடும் பச்சரிசி பொடி எறும்புகள் தூக்கி சென்றாலே நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பல பாவங்கள் நீங்கிவிடும்.அப்படி எறும்புகள் தூக்கி சென்ற பச்சரிசி பொடிகளை எறும்புகள் உடனடியாக தின்றுவிடாது. அதை புற்றுக்குள் வைத்து மழை காலம் வரை சேமித்துக் கொள்ளும்.எறும்பு எச்சில் பட்டதுமே அரிசி மாவு கெட்டுப்போகாமல் 2 1/4 வருடம் வரை இருக்கும். இரண்டேகால் வருடமாக புற்றுக்குள் இருக்கும் அரிசி மாவு பொடியை முப்பது முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும் போது அரிசி மாவு குணமும் மாறிவிடும். இதனால் எறும்புக்கு அடிக்கடி பச்சரிசி பொடி இட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஏழு ஜென்ம பாவங்களை போக்க சனிக்கிழமையில் இதை செய்யுங்கள் ….!!

ஒரே ஒரு எறும்பு நாம் போடுகின்ற பச்சரிசி பொடியை சாப்பிட்டால் கூட சனிபகவானின் தொல்லையிலிருந்து நாம் விடுபடலாம். ஏழரை சனி ,அஷ்டம சனி கண்டசனி ,அர்த்தாஷ்டம சனி என சனி தோஷங்கள் அனைத்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமலும், கெடுபலன் கொடுக்காமலும் இருக்கும். அத்துடன் அரிசி மாவில் கோலமிடுவதால் எறும்புக்கும் பூச்சிகளுக்கும் உணவாக அமைகிறது என்பது காஞ்சி மகாபெரியவாவின் கூற்று.