பிரதமரும் முதலமைச்சரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தான் வேண்டுமா?

 

பிரதமரும் முதலமைச்சரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தான் வேண்டுமா?

கொரோனா அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்று. இந்தியா இன்றளவும் உலக அளவில் அதிக அளவில் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையை பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியாவில் புதிய குரல் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது. அதேபோல் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆயினும் இரண்டாம் அலை வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு வகையில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பிரதமரும் முதலமைச்சரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தான் வேண்டுமா?

ஜனவரி மாதம் 16 ஆம் தேதி இந்தியா முழுக்க கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கியது. கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை ஒரு லட்சத்தை நேற்று கடந்துவிட்டது. தமிழ்நாட்டிலும் கணிசமான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றனர். அதாவது தடுப்பூசியை மீது நம்பிக்கை ஏற்படுத்த பிரதமரும் மத்திய அமைச்சர்களும் அந்தந்த மாநில முதல்வர்களும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

பிரதமரும் முதலமைச்சரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தான் வேண்டுமா?

பிரதமரும் முதலமைச்சரும் அவசியம் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி இப்போது முக்கியமாக இருக்கிறது. மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது எனப் பார்த்தால், அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவில்தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துவிட்டது. அங்கு ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய 2 வகை தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இப்போதைய அதிபரான ஜோ பைடனுக்கு வயது எழுபதுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். துணை அதிபரான கமலா ஹாரீஷூம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை லைவ் நிகழ்ச்சியாக எல்லோரும் பார்க்கும்படி செய்தார்.

பிரதமரும் முதலமைச்சரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தான் வேண்டுமா?
Photo by Adam Schultz / Biden for President

எதற்காக இவர்கள் இப்படிச் செய்ய வேண்டும் என்றால், புதிதாக ஒரு தடுப்பூசி வரும்போது மக்கள் அதை போட்டுக் கொள்ள அச்சப்படுவார்கள். அந்த அச்சத்தைப் போக்கும் விதமாக அந்த நாட்டின் உயர் பொறுப்புகளில் பதவிகளில் இருப்பவர்கள் அந்த ஊசியை போட்டுக் கொள்வது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும். எனவே அமெரிக்காவில் போய் செய்தார்கள். பிரிட்டன் போன்ற மற்ற நாடுகளிலும் அதன் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறார்கள்.

பிரதமரும் முதலமைச்சரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தான் வேண்டுமா?

அதை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். தடுப்பூசி போட்டுக் கொள்வதும் மறுப்பதும் தனிமனித உரிமை என்றாலும் உயர் பதவியில் இருப்பவர்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் என்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டுக்கொண்டதும் அப்படித்தான்.

இந்திய பிரதமரும் தமிழக முதல்வரும் செய்வார்களா என்று கேள்வி இதற்கு அவர்கள் பதில் கொடுக்கும் வரை தொடர்ந்து கேட்கத்தான் செய்வார்கள்.