கொரோனா கொத்துக்கொத்தாக பரவும்… ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

 

கொரோனா கொத்துக்கொத்தாக பரவும்… ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா கொத்துக்கொத்தாக பரவும்… ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரேநாளில் 1,893 ஆக பதிவாகியிருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று இன்று 27பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கூட்டம் கூடுவதாலேயே தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.கொரோனாவை அலட்சியமாக நினைக்க வேண்டாம்; அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு போல் கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம், தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும். கொரோனா அதிகமாகி வரும் நேரத்தில் 38% பேர் தான் மாஸ்க் அணிகின்றனர்.

கொரோனா கொத்துக்கொத்தாக பரவும்… ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

இனி வரும் பண்டிகை காலங்களில் கூட்டம் சேராமல் தனிமையில் கொண்டாட வேண்டும். தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனாவால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, கோவை, காரமடை பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழக அரசை அறிவுறுத்தியும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது இல்லை. பொது மக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொத்துக்கொத்தாக பரவும். கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.