மழை பெய்வதால் பழைய கட்டடங்களில் தங்க வேண்டாம்!

 

மழை பெய்வதால் பழைய கட்டடங்களில் தங்க வேண்டாம்!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழைய கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு கூறியுள்ளது.

மழை பெய்வதால் பழைய கட்டடங்களில் தங்க வேண்டாம்!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மதியம் 12 மணிவரை கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல் காலை முதலே தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் காலையில் ஓய்ந்த மழையானது மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது.

மழை பெய்வதால் பழைய கட்டடங்களில் தங்க வேண்டாம்!

தற்போது மீண்டும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, வேளச்சேரி, ஆவடி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது.