“கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை; எப்போதும் மாஸ்க் அணியுங்கள்” : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!

“கொரோனாவுக்கு  எதிரான போர் இன்னும் முடியவில்லை; எப்போதும் மாஸ்க் அணியுங்கள்” : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!

சமூக வலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“கொரோனாவுக்கு  எதிரான போர் இன்னும் முடியவில்லை; எப்போதும் மாஸ்க் அணியுங்கள்” : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!

இந்தியாவின் பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது பேசிய மோடி, ” கார்கில் போர் வெற்றி தினம் இன்று . ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது . கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலி . ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பாகிஸ்தானோடு நட்புறவையே இந்தியா விரும்பியது. ஆனால் பாகிஸ்தான் இயற்கையான குணத்தின் காரணமாக இந்தியாவை முதுகில் குத்தியது”  என்றார்.

“சமூக வலைத்தளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்று வலியுறுத்தினார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போர் முடியாததால் மக்கள் எப்போதும் மாஸ்க் அணிய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.