முதல்வரின் திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் வேண்டுகோள்!

 

முதல்வரின் திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் வேண்டுகோள்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் முதல்வரின் சிறப்பு திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வரின் திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் வேண்டுகோள்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் ஒரு பெற்றோரை இழந்து பிரிவில் 3,409 குழந்தைகள், இரண்டு பெற்றோர்களையும் இழந்த பிரிவில் 92 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வைக்கப்படுகிறது. பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றி கரை தூக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். அதை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் வேண்டுகோள்!

முன்னதாக, கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுமென முதல்வர் அறிவித்தார். அந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்பட்ட தொகை வட்டியுடன் வழங்கப்படும் என்றும் உயர்கல்வி வரை படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தையும் முதல்வர் தொடக்கி வைத்த நிலையில், சிலர் இது குறித்த பல்வேறு வதந்திகளை பரப்பி வருவதால் கீதா ஜீவன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.