• March
    31
    Tuesday

Main Area

Main



டாக்டர்களின் மன உறுதியை குலைக்காதீர்கள்! - மத்திய சுகாதாரத் துறை அமைச்சசர் வேண்டுகோள்

harsh-vardhan
harsh-vardhan

மருத்துவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுவது, தாக்குவது என்று நாடு முழுவதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், மருத்துவர்களின் மன உறுதியை குலைக்காதீர்கள் என்று மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

corona-doctors


இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், "கொரோனாவுக்கு எதிரான போர் என்பது தேசத்தின் பொறுப்பு... மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் இந்த போரின் வீரர்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக, அவர்களை பிரித்துப் பார்க்கும் போக்கை சிலர் உருவாக்கி வருகின்றனர். கொரோனா வீரர்களின் மன உறுதியை குலைக்காதீர்கள். இந்த போர் என்பது புனிதமானது என்பதை மறக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.