காவிரி வேளாண் மண்டலத்தில் சாயக் கழிவு ஆலை அமைக்கக் கூடாது! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி வேளாண் மண்டலத்தில் சாயக் கழிவு ஆலை அமைக்கக் கூடாது! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துவிட்டு சிதம்பரத்தில் சாயக் கழிவு ஆலை அமைக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி வேளாண் மண்டலத்தில் சாயக் கழிவு ஆலை அமைக்கக் கூடாது! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “சிதம்பரம்: காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், நீர்வளத்தை அழிக்கும் #சைமாடெக்ஸ் சாயக்கழிவு ஆலை அமைப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடு அல்ல. இத்திட்டத்தை கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு ட்வீடில், “இயற்கை மீது மனிதர்கள் நடத்தியத் தாக்குதல்கள் திருப்பித் தாக்குவதை கொரோனா, வெட்டுக்கிளி, புயல் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே இனிமேல் மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்” என்றும், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுக்கான EIA விதிகளை தளர்த்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!” என்றும் கூறியுள்ளார்.