ஆவின் பாலகத்தில் டீ விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை : அமைச்சர் நாசர்

 

ஆவின் பாலகத்தில் டீ விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை : அமைச்சர் நாசர்

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆவின் பாலகத்தில் டீ விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை : அமைச்சர் நாசர்

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், “ஆவின் விற்பனை முகவர்கள் பால் தவிர வேறு எதுவும் விற்பனை செய்யக்கூடாது. அதைபோல் ஆவின் பால் விற்பனை நிலையத்தில் ஆவின் பொருட்கள் தவிர வேறு எதையும் விற்பனை செய்யக்கூடாது . அப்படி செய்வது தவறு . ஒருவேளை அப்படி விற்பனை செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பாலகத்தில் டீ விற்பனை செய்யக் கூடாது, அவ்வாறு விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஆவின் பாலகத்தில் டீ விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை : அமைச்சர் நாசர்

தொடர்ந்து பேசிய அவர், ” ஆவின் நிறுவனத்தில் சுமார் 152 பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பொருட்களை வெளிநாடு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி அதற்கான நடவடிக்கைகளை செய்து வருகிறோம் . கிழக்காசிய நாடுகள், மேற்கத்திய நாடுகளுக்கும் அனுப்புவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . ஏற்கனவே அந்த நாடுகளுக்கு சென்றாலும் கடந்த ஆட்சியில் அது தடைப்பட்டது.அதை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் விலை குறைக்கப்பட்டதால் தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் சரி கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.