மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம்!

 

மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம்!

மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம்!

தமிழகத்தில் இன்றைய விவாத பொருளாக மாறியுள்ளது நீட் தேர்வு. பலத்த எதிர்ப்புகள், எதிர்ப்பார்ப்புகள், சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடந்து முடிந்தது. ஆனால் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது நம்மால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. நீட் தேர்வு சர்ச்சை குறித்து ஆளும் அதிமுக, ஆண்ட திமுக கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டி வருகின்றன.

மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம்!

இதுஒருபுறமிருக்க நடிகர் சூர்யா சொன்ன கருத்து கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளை திட்டி தீர்த்துள்ள சூர்யா நீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. சூர்யாவின் கருத்து தற்போது ஆதரவையும், எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது.

மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம்!

இந்நிலையில் கோவை செல்வபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன், “சினிமாவில் வசனம் பேசுவதை போல மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம். மாணவர்களின் தற்கொலையைத் தொடர்ந்து போட்டித் தேர்வுகளே நடத்த கூடாது என்பதுபோல் சூர்யா பேசுகிறார்.படிக்கும் மாணவர்களே அளவிட ஒரு அளவுகோல் தேவைப்படுவதால் தேர்வு நடத்தப்படுகிறது. உங்கள் படம் ஓடட்டும். நன்றாக வசனம் பேசுங்கள். ஆனால் எங்கள் மாணவர்களை இருட்டில் தள்ளி விடாதீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.