“கொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மது அருந்தாதீர்” – அமைச்சர் விஜயபாஸ்கர்

“கொரோனா  தடுப்பூசி போட்டு விட்டு மது அருந்தாதீர்” – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மது அருந்தாதீர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கொரோனா  தடுப்பூசி போட்டு விட்டு மது அருந்தாதீர்” – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி 16 ஆம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி நேற்று புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தது. அதில் சுமார் 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு 5.36 லட்சமும் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் 20 ஆயிரமும் கொண்டுவரப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்.

“கொரோனா  தடுப்பூசி போட்டு விட்டு மது அருந்தாதீர்” – அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. 2வது டோஸ் போடும் வரையிலும் 28 நாட்களுக்கு மது அருந்த கூடாது எனவும் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் நானும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.