‘விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்’ – மத்திய அமைச்சர் தோமர்

‘விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்’ – மத்திய அமைச்சர் தோமர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் கடந்த வியாழக்கிழமையில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், புகை குண்டுகளை வீசியும் போலீசார் தடுத்த நிறுத்த முயன்ற நிலையிலும், அனைத்து தடைகளையும் மீறி விவசாயிகள் முன்னேறிச் சென்றனர். விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றதால், காவல்துறை அவர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியது.

‘விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்’ – மத்திய அமைச்சர் தோமர்

இதை தொடர்ந்து டெல்லிக்கு விவசாயிகளை வர அனுமதி அளித்த காவல்துறையினர், அமைதியான முறையில் தான் போராட்டம் நடத்த வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்தனர். அதன் படி, டெல்லியில் இன்று 3ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் மீதான இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

‘விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்’ – மத்திய அமைச்சர் தோமர்

இது குறித்து பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டார். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது என்றும் டிச.3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.