“பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சோதனை” – திருப்பூர் ஆட்சியர் அட்வைஸ்!

 

“பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சோதனை” – திருப்பூர் ஆட்சியர் அட்வைஸ்!

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வாகன சோதனையை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஜயகார்த்திகேயன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இதன்படி, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளம்பாலம் செல்லாண்டியம்மன் கோவில், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசிபாளையம், தாராபுரம் பொண்ணு மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை ஆய்வுசெய்தார்.

“பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சோதனை” – திருப்பூர் ஆட்சியர் அட்வைஸ்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் விஜயகார்த்திகேயன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் முறைகேடுகளை தடுக்க தலா 24 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக்குழுக்களும், 16 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சோதனையின்போது வாகனங்களின் முழு விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்திய ஆட்சியர் விஜய கார்த்திகேயன், அதேவேளையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் வேண்டும் என கூறினார்.