கே.என். நேருவின் லீலை ; திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமா?

 

கே.என். நேருவின் லீலை ; திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் இருக்கும் நிலையில் முறைகேடுகளை தடுக்க, தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் 5 காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா நடந்தது தெரியவந்தது. அதாவது அங்குள்ள காவல் நிலையங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட கவர்கள் சிக்கியுள்ளன.

கே.என். நேருவின் லீலை ; திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமா?

பதவிக்கு ஏற்ப ரூ.2000 முதல் 10 ஆயிரம் வரை கவர்களுள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பண கவர்கள் திமுகவிடம் இருந்து விநியோகிக்கப்பட்டது.இதனால் திமுக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது.

கே.என். நேருவின் லீலை ; திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமா?

இந்நிலையில் திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரியும், திருச்சி கலெக்டருமான திவ்யதர்ஷினி செய்தியாளர்களை சந்தித்த போது, “முசிறி, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இதுவரை ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் பட்டுவாடா ,தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.என். நேருவின் லீலை ; திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமா?

திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட காவல் நிலையங்களில் பணம்பட்டுவாடா புகார் வந்ததைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளும் ,காவல் துறையும் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்து வருகின்றனர், பணம் பட்டுவாடா தொடர்பாக திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி உண்மையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் ” என்றார்.