“புதிய வகை கொரோனாவால் அச்சம் வேண்டாம்” – ராதாகிருஷ்ணன் பேட்டி!

 

“புதிய வகை கொரோனாவால் அச்சம் வேண்டாம்” – ராதாகிருஷ்ணன் பேட்டி!

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பிற நாடுகளிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு பிரிட்டன் உடனான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

“புதிய வகை கொரோனாவால் அச்சம் வேண்டாம்” – ராதாகிருஷ்ணன் பேட்டி!

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “புதிய வகை வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவு போடப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் சென்னை வந்த 1078 பேரை கண்டுபிடித்து பரிசோதனை செய்யவிருக்கிறோம். லண்டனில் இருந்து சென்னை வந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபர், உடல்நிலை சீராக இருக்கிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘எந்த வகை வைரஸால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பிரிட்டனில் புது வகை வைரஸ் பரவுவதாக தகவல் மட்டுமே வெளியாகியிருக்கிறது. அதன் பாதிப்பு குறித்த எந்த தகவலும் இன்னும் உறுதி செய்யப்படாததால், மக்கள் அச்சமடைய வேண்டாம்’ என்று கூறினார்.

மேலும், தற்போது பிரிட்டன் – இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதால் பிற நாடுகள் வழியாக வரும் நபர்கள் தனிமை படுத்தப்படுவார்கள் என்றும் கொரோனா உறுதியானாலும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.