சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட்டில் திறக்கப்படுகிறதா?

 

சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட்டில் திறக்கப்படுகிறதா?

கொரோனா நோய்த் தொற்று உலக மக்களை வாட்டி எடுத்துவருகிறது. மார்ச் மாதம் முதல் இந்தியாவில் நோய்த் தொற்று பரவுவத் தொடங்கியது. அதனால், அம்மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுக்க அனைத்து வகை வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன.

நான்கு மாதங்களாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாததால் அதை ஒட்டி ஏராளமான தொழில்கள் முடங்கி கிடைக்கின்றன. ரிலீஸ்க்குத் தயாராக இருக்கும் படங்கள் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படும் எனக் காத்திருந்து காத்திருந்து ஓ.டி.டி முறையில் வெளியிடத் தொடங்கிவிட்டனர்.

சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட்டில் திறக்கப்படுகிறதா?

ஜோதிகா நடித்த ’பொன்மகள்’, கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வெளியாகின. அடுத்து டேனி, லாக்கப் எனத் தொடர்ந்து ஓ.டி.டியில் சினிமாக்கள் வெளியிடப்படும் அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஏனெனில், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வட்டிக்குப் பணம் வாங்கிய படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்த லாக்டெளன் காலத்தில் வட்டிப் பணம் அசலையே மிஞ்சி விடும் அளவுக்கு அதிகமாகி வருவதாகச் சொல்கிறார்கள்.

இந்நில்லையில் ஆகஸ்ட் மாதம் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன என்ற செய்தி எங்கும் பேசப்பட்டன. அந்தச் செய்தியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் அமித் கரே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட்டில் திறக்கப்படுகிறதா?

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்பாக நடந்த உள்ளரங்கு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க பரிந்துரை செய்வதாகவும் ஆனால், தியேட்டரில் ஒரு சீட்டுக்கும் அடுத்த சீட்டுக்கும் நடுவே காலியான இருக்கை விட வேண்டும். அதாவது ஒரு சீட்டிலிருந்து அடுத்த சீட் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்’ என வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட்டில் திரையரங்கம் திறக்க சம்மதம் கிடைத்தாலும் நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால், தியேட்டர்களை இயக்கினாலும் பெரியளவு நஷ்டமே ஏற்படக்கூடும் என திரையரங்க அதிபர்கள் தயங்குகிறார்களாம்.