முதல்வர் பழனிசாமிக்கு கருப்புக்கொடி காட்டிய முக்குலத்தோர் அமைப்பினர் கைது!

 

முதல்வர் பழனிசாமிக்கு கருப்புக்கொடி காட்டிய முக்குலத்தோர் அமைப்பினர் கைது!

தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனுடன் சேர்த்து 7.5% இடஒதுக்கீடு சீர்மரபினருக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இது தேர்தலுக்காக வன்னியர்கள் வாக்குகளைக் கவர அறிவிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் முழங்கின. குறிப்பாக எடப்பாடி தொகுதியில் பெருவாரியான வன்னியர்கள் இருப்பதால் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமிக்கு கருப்புக்கொடி காட்டிய முக்குலத்தோர் அமைப்பினர் கைது!

இந்நிலையில் நெல்லையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே கருப்புக்கொடி காட்ட முயன்ற முக்குலத்தோர் அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.