உளவுத்துறை ரிப்போர்ட்; உஷாரான எடப்பாடி – முக்கிய நிர்வாகிகள் அதிரடி கைது!

 

உளவுத்துறை ரிப்போர்ட்; உஷாரான எடப்பாடி – முக்கிய நிர்வாகிகள் அதிரடி கைது!

தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனுடன் சேர்த்து 7.5% இடஒதுக்கீடு சீர்மரபினருக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இது தேர்தலுக்காக வன்னியர்கள் வாக்குகளைக் கவர அறிவிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் முழங்கின. குறிப்பாக எடப்பாடி தொகுதியில் பெருவாரியான வன்னியர்கள் இருப்பதாலும் முதல்வருக்கு பெர்சனலான பலனும் இதில் அடங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

உளவுத்துறை ரிப்போர்ட்; உஷாரான எடப்பாடி – முக்கிய நிர்வாகிகள் அதிரடி கைது!

இந்தச் சட்டத்தை பாமக ராமதாஸ் முதல் பல்வேறு வன்னியர் சமுதாய அமைப்புகளும் வரவேற்றன. ஆனால் இதற்கு நேரெதிராக முக்குலத்தோர் அதிகமாக இருக்கும் தென் மாவட்டங்களில் எதிர்ப்பலையை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக 68 சாதிகள் அடங்கிய சீர்மரபினர் பிரிவினருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சமுதாய அமைப்பினர் அதிமுகவுக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி மக்கள் காலில் விழுகின்றனர்.

உளவுத்துறை ரிப்போர்ட்; உஷாரான எடப்பாடி – முக்கிய நிர்வாகிகள் அதிரடி கைது!

இதனால் பெரும்பாலும் தென் மாவட்ட அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ய முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. குறிப்பாக சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்ய சென்ற அமைச்சர் ராஜலட்சுமியை சீர்மரபினர் விரட்டியடித்தனர். மற்றொரு அமைச்சர் ஆர்பி உதயகுமார் வன்னியர் இடஒதுக்கீடு தற்காலிகமானது தான் என சத்தியம் செய்திருக்கிறார். விவகாரம் இப்படியிருக்க இன்று மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்வதாக ஷெட்யூல் இருந்தது.

உளவுத்துறை ரிப்போர்ட்; உஷாரான எடப்பாடி – முக்கிய நிர்வாகிகள் அதிரடி கைது!

சீர்மரபினர் எதுவும் பிரச்சினை செய்வார்களா என்று உளவு பார்க்க தலைமை பணித்துள்ளது. அதைப் போலவே சீர்மரபினர் சங்க நிர்வாகிகள் முதல்வர் பிரச்சாரத்தின்போது எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனையறிந்து கொண்டு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளைக் கைதுசெய்ய ரகசிய உத்தரவு போடப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு கருதி சங்க நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது அதிமுக அரசின் அராஜக போக்கு என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.