தி.மு.க எம்.பி-க்களுக்கு அவமரியாதை விவகாரம் – விளக்கம் கேட்ட மத்திய அரசு?

 

தி.மு.க எம்.பி-க்களுக்கு அவமரியாதை விவகாரம் – விளக்கம் கேட்ட மத்திய அரசு?

தி.மு.க எம்.பி-க்களை தலைமைச் செயலாளர் அவமரியாதை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் நாடாளுமன்றம் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை தி.மு.க செயல்படுத்தியது. உதவி செய்ய ஒன்றிணைவோம் என்று தி.மு.க கூறியதை கூட ஏற்க முடியாத அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டிய காலத்தில் ஒன்றிணைவோம் வா என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று அறிவுப்பூர்வமான கேள்வியை எழுப்பின.

தி.மு.க எம்.பி-க்களுக்கு அவமரியாதை விவகாரம் – விளக்கம் கேட்ட மத்திய அரசு?
இந்த திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள், நிதி உதவி செய்யப்பட்டன. அரசு செய்ய வேண்டிய உதவிகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை அளிக்க தி.மு.க எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டவர்கள் சென்றபோது அவர்களை தலைமைச் செயலாளர் அவமரியாதை செய்தார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக உரிமை மீறல் பிரச்னையை தி.மு.க நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில் எழுப்பியது.
இதைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். அப்போது அவர் நான் எதுவும் செய்யவில்லை, அவர்கள்தான் மிரட்டும் வகையில் பேசினார்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதை எழுத்துப்பூர்வமாக அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மேலும் சில விளக்கங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.